நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஒளிப்பதிவு பணிகளை மனோஜ் பரமஹம்சா கவனிக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.
24
லியோ படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளதற்கு அப்படத்தின் நட்சத்திர பட்டாளமும் ஒரு காரணம். இதில் விஜய், திரிஷா தவிர, இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் மேனன், நடிகர்கள் மன்சூர் அலிகான், மேத்யூ தமாஸ், பாபு ஆண்டனி, சாண்டி மாஸ்டர், அர்ஜுன், நடிகைகள் பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, நகைச்சுவை நடிகர் வையாபுரி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என இந்த லீஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போது லியோ படத்தின் ஷூட்டிங்கே முடிவடைய உள்ள நிலையிலும் அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு இன்னும் முடிந்தபாடில்லை. அந்த வகையில் லியோ படத்தில் புது வரவாக பிரபல பாலிவுட் இயக்குனரும், வில்லன் நடிகருமான அனுராக் கஷ்யப் இணைந்துள்ளாராம். இதைப்பார்த்த ரசிகர்கள் லியோ படத்திற்கான நடிகர்கள் தேர்வுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
44
Anurag kashyap, lokesh kanagaraj
இயக்குனர் அனுராக் கஷ்யப் ஏற்கனவே தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். அதனால் அவர் லியோ படத்திலும் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நான் செத்தா லோகேஷ் கனகராஜ் படத்துல தான் சாவேன். ஏனெனில் அவர் தான் வில்லன்களுக்கு கெளரவமான சாவை கொடுக்கிறார் என கூறி இருந்தார். ஒருவேளை இந்த வீடியோ பார்த்து தான் லோகேஷ் இவருக்கு வாய்ப்பளித்திருப்பாரோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.