நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ஒரு உயரத்தை எட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இத்தனை ஆண்டுகளாக காமெடியில் கலக்கி வந்த வடிவேலு, சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் கணமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்துபோன ரசிகர்கள் அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர்.