வடிவேலு கிட்ட சான்ஸ் கேட்டு போனா இதுதான் பண்ணுவாரு... வைகைப்புயல் பற்றி நடிகை சொன்ன ஷாக்கிங் சீக்ரெட்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம் சான்ஸ் கேட்டு போனால் அவர் என்ன செய்வார் என்பதை அவருடன் நடித்த நடிகை தேவி ஸ்ரீ பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Vadivelu, devi shree
நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ஒரு உயரத்தை எட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இத்தனை ஆண்டுகளாக காமெடியில் கலக்கி வந்த வடிவேலு, சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் கணமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்துபோன ரசிகர்கள் அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர்.
devi shree
நடிகர் வடிவேலு, இன்று இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு அவருடன் காமெடி காட்சிகளில் நடித்த சக நடிகர்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட சக நடிகர்களை அவர் கண்டுகொள்வதே இல்லை என்பது தான் பலரும் வடிவேலு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆகும். முத்துக்காளை தொடங்கி பாவா லட்சுமணன் வரை வடிவேலு மீது பலரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வடிவேலுவுடன் நடித்த நடிகை தேவி ஸ்ரீ பேட்டி ஒன்றில் வைகைப்புயல் குறித்து பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... இதென்னடா மஞ்சள் வீரனுக்கு வந்த சோதனை... டிடிஎப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியது - போலீசார் வழக்குப்பதிவு
devi shree
அதில் அவர் கூறியதாவது : “நான் வடிவேலு கூட பண்ணியது ஒரு படம் தான். அவர் இரண்டாவது படத்துக்கு கூப்பிடும் போது நான் விவேக் சாரின் 2 படங்களில் கமிட் ஆகிவிட்டேன். அதனால வர முடியலனு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் அவர் எனக்கு சான்ஸ் கொடுக்கவே இல்ல. விவேக் சாரின் படங்களுக்கு பின் நான் 12 படம் நடிச்சிட்டேன், அப்படி இருந்தும் என்ன வடிவேல் சார் கூப்பிடவே இல்ல.
devi shree
நாய் சேகர் படத்துக்கு பின்னர் அண்மையில் கூட வடிவேலு சார் கிட்ட போன் பண்ணி பேசினேன். அப்போது போன் எடுத்ததும் யாருன்னு கேட்டாரு. தேவி ஸ்ரீ பேசுறேன்னு சொன்னேன். எந்த தேவி ஸ்ரீனு கேட்டாரு. உடனே இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்துல நடிச்சேனே சார்னு சொன்னதும், யார் அந்த குண்டச்சியானு கேட்டாரு. ஆமா சார்னு சொன்னதும், நான் வாய்ப்பு கேட்கும் முன்பே, நான் கூப்பிடுறேன்மானு சொல்லிட்டு போனை வச்சிட்டாரு. அப்போது தான் வடிவேலு இப்படி தான் இருப்பாரு என தெரியவந்தது. அவர் மாறவில்லை. எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்காரு என சூசகமாக வடிவேலுவை தாக்கி பேசி இருக்கிறார் தேவி ஸ்ரீ.
இதையும் படியுங்கள்... நாடி நரம்பில் புகுந்து மயக்குது தலைவா.. இசைப்புயலை புகழ்ந்து தள்ளிய செல்வராகவன் - முழு விவரம் உள்ளே!