"நேருக்கு நேர் நின்னு சண்ட செய்ய போறாங்க".. மோத தயாராகும் விஷால் & ராகவா லாரன்ஸ்!

Ansgar R |  
Published : Jul 04, 2023, 05:48 PM IST

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2, ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

PREV
14
"நேருக்கு நேர் நின்னு சண்ட செய்ய போறாங்க".. மோத தயாராகும் விஷால் & ராகவா லாரன்ஸ்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவரும் மாறுபட்ட இரு வேறு கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். 
 

24

இயக்குனர் செல்வராகவன் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி திருநாள் அன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள் : செம்ம ஸ்ட்ரெக்ச்சர்.. சேலையில் கூட ஸ்டைலிஷ் பேபியாக காட்சிதரும் ஐஸ்வர்யா!

 

34

அதேபோல பிரபல மூத்த இயக்குநர் பி.வாசு அவர்களுடைய இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வைகைப்புயல் வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் தான் சந்திரமுகி பாகம் 2.

44

கடந்த 2005ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படத்தினுடைய தொடர்ச்சியாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி மற்றும் சந்திரமுகி 2 ஆகிய இரு  திரைப்படமும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி திருநாள் அன்று வெளியாகி நேருக்கு நேர் மோதவுள்ளது.
 

இதையும் படியுங்கள் : ஒரே மாதத்தில் 7 கிலோ எடை குறைத்த பிரபல சீரியல் நடிகை

Read more Photos on
click me!

Recommended Stories