லோ நெக் பனியன்..கிழிந்த ஜீன்ஸ்..கவர்ச்சி கிளப்பிய அக்ஷரா ஹாசன்

First Published Aug 15, 2022, 8:49 PM IST

 30 களை நெருங்கி விட்ட அக்ஷரா ஹாசன் தற்போது வரை முன்னணி நடிகைக்கான பயணத்தில் பின்தங்கியே உள்ளார்.

Akshara Haasan

உலகநாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். இவர் முதலில் பாலிவுட்டில் தான் அறிமுகமானார். இரண்டு படங்கள் அங்கு நடித்த பிறகு, அஜித்தின் விவேகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள்  என்ட்ரி கொடுத்தார்.

Akshara Haasan

விவேகம் படத்தை தொடர்ந்து கடாரம் கொண்ட படத்தில் கர்ப்பிணியாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அக்ஷரா ஹாசன்.  இவர் தனது கணவனுடன் காதல் காட்சிகளிலும் சரி, கர்ப்பிணியாக  தனது பிள்ளையை காப்பாற்றுவதற்கு போராடும் காட்சிகளும் சரி ரசிகர்களை உருக வைத்திருந்தது. இந்த படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. 

மேலும் செய்திகளுக்கு...வெளிநாட்டில் தேசிய கொடியை பறக்கவிட்ட நயன்- விக்கி...வீடியோ உள்ளே!

Akshara Haasan

இதை அடுத்து சமீபத்தில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் படத்தில் நடித்திருந்தார் அக்ஷரா ஹாசன். வயது வந்தோருக்கான நாடகத் திரைப்படமான இந்த படத்தை ராஜ ராமமூர்த்தி இஐக்கி இருந்தார்.  இதில் அக்ஷராஹாசன் உடன் உஷா உதுப் ,மால்குடி சுபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் மார்ச் 25ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதோடு இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை வென்றிருந்தது.

மேலும் செய்திகளுக்கு...வெளிநாட்டு தெருக்களில் நயன்..கிளாமர் உடையில் ட்ரம்ஸ் கலைஞரை ரசிக்கும் விக்கியின் மனைவி

akshara haasan

படம் வெளியான சமயத்தில் படம் குறித்து பேசி இருந்தா அக்ஷரா ஹாசன்,  பவித்ராவின் பாத்திரம் தான் முன்பு நடித்த பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று கூறியிருந்தார். இது உண்மையில்  மிகவும் வித்தியாசமானது. ஏனென்றால் முதலில் என் வயதை நெருங்கிய ஒருவர் போல நான் நடிக்கவில்லை. நான் திரும்பிச் சென்று எனது பத்தொன்பது வயதில்  இருந்தபோது  எப்படி இருந்தேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருந்தது.  இது மிகவும் சவாலாக இருந்தது,. அதோடு கடினமாகவும் இருந்தது எனக் கூறியிருந்தார் . அவரது பேட்டி அப்போது வைரலாகி இருந்தது.

akshara haasan

சமீபத்தில் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து முடித்துள்ளார் அக்ஷரா . அதோடு ஃபிங்கர் டிப் என்னும் ஜி5 வெப் சீரிஸில் நடித்திருந்த இவர் ப்ரியாவாக ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த தொடர் கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பானது.

மேலும் செய்திகளுக்கு.. அட..லேடி சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்காங்களே!..வைரலாகும் வாணி போஜனின் நியூ லுக்

akshara haasan

அக்ஷரா ஹாசனால் அவரது அக்கா ஸ்ருதிஹாசன் போல நடிகையாக ஜொலிக்க முடியவில்லை என்று கூறலாம். 30 களை நெருங்கி விட்ட அவர் தற்போது வரை முன்னணி நடிகைக்கான பயணத்தில் பின்தங்கியே உள்ளார். 

akshara haasan

 இதற்கிடையே மற்ற நடிகைகள் போல இவரும் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பனியன், கிழிந்த ஜீன்ஸுமாக இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. லைக்குகளை குவித்து வருகிறது.

click me!