
70 வயதை எட்டிவிட்ட கவிப்பேரரசு வைரமுத்து, சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "நிழல்கள்" என்கின்ற திரைப்படத்தில் ஒலித்த "இது ஒரு பொன் மாலை பொழுது" என்கின்ற பாடலை எழுதி தனது கலைப் பயணத்தை தொடங்கினார். இந்த அரை நூற்றாண்டு பயணத்தில் தமிழ் மொழியில் மிகச்சிறந்த பாடலாசிரியராக பயணித்து வருகின்றார் வைரமுத்து.
கடந்த 1985 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மக்கள் திலகத்தின் "முதல் மரியாதை" திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல்களுக்காக, வைரமுத்துவுக்கு முதல் முதலில் தேசிய விருது கிடைத்தது. இதுவரை 7 தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசு வழங்கும் 6 மாநில விருதுகள், நான்கு கௌரவ டாக்டர் பட்டங்கள், 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கவிதை தொகுப்புகள் என்று மிகப்பெரிய பாராட்டுதலுக்கு உரிய ஒரு மனிதனாக பயணித்து வருகிறார் வைரமுத்து.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக விளங்கிய, விளங்கி கொண்டிருக்கின்ற சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் என்று பல மூத்த நடிகர்களுக்கு பாடல்களை எழுதிய வைரமுத்து, மறைந்த நடிகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பாடல்களை எழுதியதில்லை. ஆனால் அந்த குறையை தற்பொழுது உள்ள தொழில்நுட்பம் தீர்த்து விட்டதாக கூறி ஒரு பதிவினை அவர் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் "எனக்கொரு பாடல் வந்தது, வியந்தும் மகிழ்ந்தும் போனேன். அலிபாபாவும்
40 திருடர்களும் படத்தில், எம்.ஜி.ஆரும் பானுமதியும் நடித்த புகழ்பெற்ற பாடல் காட்சியோடு நான் எழுதிய பாடல் ஒன்றைப் பொருத்தியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்குப் பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை
தொழில்நுட்பத்தால் தீர்ந்தது. ஆனால், வேறொரு குறை வந்துவிட்டது, இதைக் கண்டு களிப்பதற்கு எம்.ஜி.ஆரும் பானுமதியும் இன்றில்லையே!" என்று எழுதியுள்ளார்.
இந்த பாடல்கள் எல்லாம் சுசித்ரா பாடுனதா? சூப்பர்ஹிட் தமிழ் பாடல்கள் லிஸ்ட் இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.