Inga Naan Thaan Kingu Review : காமெடியில் கலக்கினாரா சந்தானம்? இங்க நான் தான் கிங்கு படத்தின் விமர்சனம் இதோ

By Ganesh A  |  First Published May 17, 2024, 1:55 PM IST

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த சந்தானம், ஒருகட்டத்தில் காமெடியன் ரோல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன.

கடந்த ஆண்டு டிடி ரிட்டன்ஸ் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த சந்தானத்திற்கு, இந்த ஆண்டு சக்சஸ்புல் ஆண்டாகவே அமைந்துள்ளது. அவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் ‘இங்க நான் தான் கிங்கு’. இப்படத்தை ஆனந்த் நாராயணன் என்பவர் இயக்கி இருக்கிறார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... Prabhas : கல்கி நாயகனுக்கு கல்யாணமா? 44 வயதாகும் நடிகர் பிரபாஸ் வாழ்க்கையில் நுழைந்த அந்த டார்லிங் யார்?

இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, சேஷு, விவேக் பிரசன்னா, முனீஸ்காந்த், மாறன், பால சரவணன் என மிகப்பெரிய காமெடிப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முந்தைய படத்தால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக இப்படத்தில் நடிக்க கமிட் ஆனார் சந்தானம். இப்படமும் கடன் வாங்குவதால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தியாகராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தின் விமர்சனத்தை நம்முடைய ஏசியாநெட் தமிழுக்கு பிரத்யேகமாக கூறி இருக்கிறார்கள். அதனை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... பட்டியலின சாதி குறித்து சர்ச்சை பேச்சு.. வைரலான ஆடியோ.. நடிகர் கார்த்திக் குமார் காவல்துறையில் புகார்.

click me!