ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ரத்னம் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனரான ஹரி, நடிகர் விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் ரத்னம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் மாஸ் ஹிட் அடித்த நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
ஹரி படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் ரத்னம் படத்தில் ஆக்ஷன் ஹீரோ விஷால் உடன் அவர் இணைந்திருப்பதால் இப்படமும் ஆக்ஷன் நிறைந்த படமாகவே உருவாகி இருக்கிறது. இப்படம் இன்று உலகமெங்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரத்னம் படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பதை தற்போது பார்க்கலாம்.
undefined
இதையும் படியுங்கள்... Manimegalai : சின்னத்திரையை கலக்கும் நட்சத்திர ஜோடி.. ஹுசைன், மணிமேகலையின் யூடியூப் வருமானம் எவ்வளவு தெரியுமா?
ரத்னம், வழக்கமான ஒரு மாஸ் ஆக்ஷன் டிராமா திரைப்படம், ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஒர்க் ஆகவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தான் படத்திற்கு பலமாக அமைந்துள்ளதை நினைக்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. மற்றபடி சத்தம் நிறைந்த, பழைய டெம்பிளேட் உடன் ரத்தக்களறியாக உள்ளது. இயக்குனர் ஹரி சரியான கம்பேக் படம் கொடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- 2/5
A generic mass masala action drama that doesn’t work as expected. Surprisingly, DSP’s songs are the only soothening element in this otherwise loud, outdated bloodbath & sadly, Dir. Hari still needs a proper comeback film.
Verdict: Forgettable fare. pic.twitter.com/xzSlts9pHF
ரத்னம், சிம்பிளான ஆக்ஷன் டிராமா, இயக்குனர் ஹரி ஸ்டைலில் உள்ளது. அவரின் பழைய டெம்பிளேட் தான், சில ஆக்ஷன் காட்சிகள் மற்றும் காமெடி காட்சிகள் தான் நன்றாக உள்ளன. எமோஷனல் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தாலும் சில இடங்களில டல் அடிக்கிறது. விஷாலின் நடிப்பு தரமாக உள்ளது. மற்றவர்களின் நடிப்பு ஓகே ரகம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Typical Hari Vishal combo action drama pic.twitter.com/KXrPze3pOg
ரத்னம் படத்தின் இரண்டாம் பாதி வெறித்தனமாக உள்ளது. சிங்கம் 1, சிங்கம் 2 படங்களை போன்று இதில் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றன. எமோஷனல் காட்சிகளும் பலம் சேர்த்துள்ளன என பதிவிட்டுள்ளார்.
2nd Half is 💥💥💥Veri , comedy elements also worked like singam singam2 comedy portions 😊. Emotions 💥💥
— SRS CA TV (@srs_ca_tv)இதையும் படியுங்கள்... Samantha : விவாகரத்து ஆனாலும்... திருமண ஆடையை தூக்கிப் போட மனமின்றி; வெட்டிங் டிரெஸை வேறலெவலில் மாற்றிய சமந்தா