விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் ரோமியோ திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்டார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்துவரும் விஜய் ஆண்டனிக்கு ரொமான்ஸ் மட்டும் செட் ஆகாத ஒன்றாகவே இருந்து வந்தது. அதை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்கிற முனைப்போடு அவர் நடித்துள்ள திரைப்படம் தான் ரோமியோ. இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசன் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள விஜய் ஆண்டனி தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே இப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
இதையும் படியுங்கள்... Thalapathy 69 : தயாரிப்பாளருடன் மோதல்... கைமாறியது தளபதி விஜய்யின் கடைசி படம் - அப்போ 250 கோடி போச்சா?
பரூக் பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பீக்கிற்கு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படம் ரம்ஜான் ஸ்பெஷலாக திரையரங்குகளில ரிலீஸ் ஆகி உள்ளது.
அப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள், நம்முடைய ஏசியாநெட் தமிழுக்கு அளித்த பிரத்யேக விமர்சனத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம். பெரும்பாலான ரசிகர்கள் படத்தில் காமெடி மற்றும் ரொமாண்டிக் காட்சிகள் அருமையாக உள்ளதாகவும், தமிழ் சினிமாவை மீட்டெடுக்க வந்த படமாக இது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். நல்ல விமர்சனம் வந்துள்ளதால் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... GOAT movie : ரஜினியுடன் மோதல் இல்லை... சிங்கம் போல் சிங்கிளாக திரைக்கு வருகிறது கோட் - ரிலீஸ் தேதி அறிவிப்பு