பட்டியலின சாதி குறித்து நடிகர் கார்த்திக் குமார் அவதூறாக பேசியதாக ஆடியோ வைரலான நிலையில், அவர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு பிரபல பிண்னனி பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிரவைத்தார். சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா, டிடி, ஹன்சிகா, அனிருத் உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது கூறியிருந்தார்.
இந்த நிலையில் சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபலங்களின் புகைப்படங்களை பகிர தனது ட்விட்டர் கணக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் தனது கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்ற ரீதியில் பேசியிருந்தார். மேலும் நடிகை த்ரிஷா, கமல், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் குறித்தும் அவர் பேசியிருந்தார்.
இந்த சூழலில் நடிகர் கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில் “ நீ அசிங்கமாக பேசுற.. இதெல்லாம் படித்தவர்கள் பேசுற பேச்சு இல்ல.. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுற மாதிரி நீ பேசுகிறாய்.. உன் வளர்ப்பு அப்படி இல்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்பு தானே.. ஆச்சாரமான, பிராமின் குடும்பத்துல இருந்து தான நீ வந்த.. அப்புறம் ஏன் இந்த கேவலமான பேச்சு..” என்று கூறுகிறார்.
பட்டியல் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய நடிகர் கார்த்திக் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீங்க படிச்சு கிழிச்சது உங்களோட இந்த பேச்சுலேயே தெளிவா தெரியுதுடா
படிச்ச, பிராமிண், ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து பேசும்… pic.twitter.com/FfQa51BT3p
இந்த ஆடியோ வைரலான நிலையில் கார்த்திக் குமாருக்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த ஆடியோவில் தன்னுடைய குரல் இல்லை நெறு கார்த்திக் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” நான் இப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. நான் அப்படி பேசக்கூடிய ஆளும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது அவதூறு பரப்பிய சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஃப்..ஐ.ஆர் விரைவில் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அப்படி பேசியது யார் என்று கண்டுபிடிக்க புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பாடல்கள் எல்லாம் சுசித்ரா பாடுனதா? சூப்பர்ஹிட் தமிழ் பாடல்கள் லிஸ்ட் இதோ..