இந்த பாடல்கள் எல்லாம் சுசித்ரா பாடுனதா? சூப்பர்ஹிட் தமிழ் பாடல்கள் லிஸ்ட் இதோ..

By Ramya s  |  First Published May 17, 2024, 11:26 AM IST

சுசித்ரா குரலில் வெளியான டாப் ஹிட் பாடல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


RJ-வாக பிரபலமான சுசித்ரா, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடி உள்ளார். மேலும் தமிழில் தமன்னா, மாளவிகா, ஸ்ரேயா, லட்சுமி ராய் உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் பேசி உள்ளார். லேசா லேசா படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற எனை போலவே காற்று என்ற பாடல் அவரின் முதல் பாடல். இதை தொடர்ந்து பல பாடல்களை பாடி உள்ளார். 

இதனிடையே யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக் என்பவரை கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எனினும் 2017-ம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர். கடந்த 2016-ம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல நடிகர், நடிகைகள் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்தார்.

Latest Videos

வனிதா வீட்டை ஆபாச பட ஷூட்டிங்கிற்காக பயில்வான் பயன்படுத்தினார்... சுசித்ரா சொன்ன பகீர் தகவலால் பதறிய கோலிவுட்

இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து சுசித்ரா இதுகுறித்து பேசி உள்ளார். தனது கணவர் கார்த்திக், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், த்ரிஷா, கமல் என பல பிரபலங்கள் குறித்தும் பேசி உள்ளார்.இதனால் தற்போது சுசித்ரா தான் கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளார். இந்த சூழலில் சுசித்ரா குரலில் வெளியான டாப் ஹிட் பாடல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதவன் நடிப்பில் வெளியான ஜே.ஜே படத்தில் இடம்பெற்ற மே மாத 98 பாடல் சுசித்ரா பாடியது தான். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டானது. பரத்வாஜ் இசையில் உருவான இந்த படத்தின் அனைத்து பாடல்களும் கொண்டாடப்பட்டது.

சிம்பு, ஜோதிகா நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் இடம்பெற்ற என் ஆச மைதிலியே பாடல் சுசித்ரா பாடிய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாகும். யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. 

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படம். இந்த படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே பாடலை சுசித்ரா பாடியிருப்பார். இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்ற பாடலாகும். 

இதே போல் உள்ளம் கேட்குமே படத்தில் கனவுகள் பெரிய கனவுகள் பாடல், வல்லவன் படத்தில் இடம்பெற்ற யம்மாடி, ஆத்தாடி பாடல், போக்கிரி படத்தில் இடம்பெற்ற என் செல்ல பேரு ஆப்பிள், டோலு டோலு தான் ஆகிய பாடல்கள், காளை படத்தில் இடம்பெற்ற குட்டிபிசாசே பாடல், ஆகிய பாடல்கள் சுசித்ராவின் ஹிட் பாடல்கள் ஆகும்.

இதே போல் யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போறவளே பாடல், சிலம்பாட்டம் படத்தில் வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள பாடல், கந்தசாமி படத்தில் இடம்பெற்ற எக்ஸ்க்யூஸ் மிஸ்டர் கந்தசாமி பாடல், மாஸ்கோவின் காவேரி படத்தில் இடம்பெற்ற கோரே கோரே பாடல், வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற ஒரு சின்ன தாமரை ஆகிய பாடல்களும் சுசித்ரா பாடிய பாடல்கள் தான். 

Suchitra: Suchi leaks போட்டோ எல்லாம் திரிஷா கொடுத்தது.. புது குண்டை தூக்கிப்போட்ட சுசித்ரா; பதிலடி தந்த திரிஷா

சிங்கம் படத்தில் இடம்பெற்ற என் இதயம் இதுவரை பாடல், சிறுத்தை படத்ஹில் இடம்பெற்ற ராக்கமா பாடல், காவலன் படத்தில் இடம்பெற்ற யாரது பாடல், மாற்றான் படத்தில் இடம்பெற்ற தீயே, தீயே பாடல், வணக்கம் சென்னை படத்தில் இடம்பெற்ற ஐலசா, ஐலே ஐலசா ஆகிய பாடல்களும் சுசித்ராவின் ஹிட் பாடல்கள் ஆகும். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல பாடல்களை சுசித்ரா பாடியுள்ளார். 

click me!