அம்மாடியோ...வர வர எல்லையை மீறும் ஷ்ரியா சரண்...முதுகை முழுவதும் காட்டி சொக்க வைக்கும் நாயகி

First Published Oct 1, 2022, 7:40 PM IST

நடிகை ஷ்ரியா சரண் டாப்லெஸ் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள்....

Shriya Saran

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என தென்மொழிகள் அனைத்திலும் ஒரு கை பார்த்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் காமியோ ரோலில் தோன்றியிருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி இருந்தது. 

Shriya Saran

இதை தொடர்ந்து பல வருட இடைவெளிக்கு பிறகு மழை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வந்து கவர்ச்சி புயலாக ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஸ்ரேயா. மழையில் நனைந்தபடி இவர் போட்ட ஆட்டம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமே. இருந்தும் இவருக்கு அப்போது தமிழில் பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

மேலும் செய்திகளுக்கு...இந்த வருடத்தில் எந்தெந்த படங்கள் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது தெரியுமா?

Shriya Saran

தெலுங்கு, கன்னடம்  சில படங்களுக்குப் பிறகு திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும் சிவாஜி தி பாஸ் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகவும், அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தோரணை, கந்தசுவாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், சிக்கு புக்கு, ரௌத்திரம், ராஜபாட்டை, சந்திரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என அடுத்தடுத்து முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார் ஸ்ரேயா.

Shriya Saran

தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள இவர்ஆர் ஆர் ஆர்  படத்தில் சரோஜினியாக  கலக்கி இருந்தார். தற்போது திரிஷயம் 2, நரகாசுரன், சண்டக்காரி உள்ளிட்ட பல படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அனைத்து மொழிப்படங்களிலும் பிசியாக இருந்து வந்த ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை காதலித்தது கரம் பிடித்தார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  கடந்த வருடம் இவர்களுக்கு ராதா என்கிற மகள் பிறந்தாள்..

மேலும் செய்திகளுக்கு...விருது வழங்கும் மேடையை தொட்டு வணங்கிய சூர்யா...வைரலாகும் போட்டோஸ் இதோ!

Shriya Saran

அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகளுடன் பிகினி போன்ற உடைகளை அணிந்து வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் ஸ்ரேயா 40 வயதாகும் ஸ்ரேயா இன்னமும் இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில்  கட்டுக்கோப்பான உடலமைப்பை மெயிண்டன் செய்து வருகிறார். தற்போது  மேலாடை அணியாமல் முழு முதுகும் தெரியும்படி புடவையை  வைத்து முன்னழகை மறைத்தபடி இவர் கொடுத்துள்ள போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

click me!