Kajal Aggarwal: கர்ப்பமாக இருந்தாலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத காஜல்? ஜொலிக்கும் உடையில் செம்ம ஹாட் போஸ்!

First Published Jan 2, 2022, 1:11 PM IST

நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal) கர்ப்பமாக இருக்கும் தகவலை, அவரது கணவர் நேற்று இரவு உறுதி செய்த நிலையில், சற்று முன்னர் காஜல் கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கவர்ச்சி நடிகைகளுக்கு இணையாக, தாங்கள் நடிக்கும் படங்களில் கிளாமரில் தூள் கிளப்பும் நடிகைகளில் ஒருவராக இருந்த காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், சூர்யா, போன்ற ஹீரோக்களுடன் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்.

30 வயதை கடந்த நடிகையாக இருந்தாலும், இவரின் அழகு மற்றும் கவர்ச்சிக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டு, இவருடைய நீண்ட நாள் காதலரான கெளதம் கிட்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்பு, நடிப்பதை நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.

ஆனால் சமீப காலமாக இவர் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்ததால், காஜல் கர்ப்பமாக உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இது குறித்து, காஜல் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், காஜல் கர்ப்பமாக இருக்கும் தகவலை புத்தாண்டு தினமான நேற்று இரவு காஜலின் கணவர் வெளியிட்டார். கர்ப்பமாக இருந்தாலும் கவர்ச்சி உடையில் இந்த வருட புத்தாண்டை வரவேற்ற புகைப்படங்களை தற்போது காஜல் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!