ஹவுஸ்புல் ஆன பொங்கல் ரேஸ்; சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கார்த்தியின் வா வாத்தியார்

First Published | Nov 20, 2024, 2:58 PM IST

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது.

vaa vaathiyaar

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் கார்த்தி. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சூர்யா தயாரித்திருந்த இப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு உன்னத படைப்பாக மெய்யழகன் திரைப்படம் இருந்தது. இப்படம் ஓடிடியிலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Karthi

மெய்யழகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக உள்ள படம் வா வாத்தியார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... இந்தியாவின் மிகப்பெரிய ஃபிளாப் படம்! பிரபல இயக்குனர், உச்ச நடிகர் நடித்தும் டிசாஸ்டராக மாறிய படம்!

Tap to resize

Vaa Vaathiyaar Movie

வா வாத்தியார் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் ஒளிப்பதிவு பணிகளை ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ளார். இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே பொங்கல் ரேஸில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான், ஷங்கரின் பிரம்மாண்ட படமான கேம் சேஞ்சர் போன்ற திரைப்படங்கள் போட்டி போட்டு களமிறங்கி உள்ளன.

Vaa Vaathiyaar Movie Release Date

இதனால் பொங்கல் பண்டிகைக்கு வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்யும் ஐடியாவை படக்குழு கைவிட்டுள்ளது. அதற்கு பதிலாக பொங்கல் முடிந்த பின்னர் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விடுமுறையில் வா வாத்தியார் படத்தை சிங்கிளாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடைசியாக தயாரித்த கங்குவா படம் படுதோல்வியை சந்தித்துள்ளதால், வா வாத்தியார் படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கர்நாடகாவில் வாஷ் அவுட் ஆன கங்குவா; எல்லாத்துக்கும் காரணம் ஷிவராஜ்குமார் தானாம்!

Latest Videos

click me!