சூர்யா நடித்த மெளனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. அப்படம் ரிலீஸ் ஆகி 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்றளவும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் த்ரிஷா. மெளனம் பேசியதே படத்தை தொடர்ந்து ஹரி இயக்கிய ஆறு திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் த்ரிஷா. இந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இருப்பினும் இப்படங்களுக்கு பின்னர் இருவருமே ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை.
24
Suriya 45 Movie
இதனால் சூர்யா - த்ரிஷா ஜோடியை மிஸ் பண்ணி வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். அதன்படி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 45 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் சூர்யாவும், த்ரிஷாவும் சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.
சூர்யா 45 திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின் சூர்யா நடிக்கும் படம் இது என்பதால், இது அவரின் கம்பேக் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவும் த்ரிஷாவும் இதற்கு முன்னர் நடித்த மெளனம் பேசியதே மற்றும் ஆறு ஆகிய இரண்டு படங்களும் ஹிட் ஆனதால், சூர்யா 45 படம் மூலம் அவர்கள் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
44
Suriya Pair up with Trisha
சூர்யா 45 படத்திற்கு முன்னதாக நடிகை த்ரிஷா கைவசம் ஏராளமான பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. அதன்படி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக அஜித்துக்கு ஜோடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அவர் கைவசம் அஜித்தின் விடாமுயற்சி, மலையாளத்தில் டொவினோ தாமஸின் எவிடன்ஸ், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா போன்ற படங்கள் உள்ளன. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக சூர்யா 45 படமும் இணைந்துள்ளது.