
கோலிவுட் முதல் பாலிவுட் வரை அதிக படங்களைத் தயாரிக்கும் ஒரே நாடு இந்தியா. இந்தியாவில் பல படங்கள் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படுகின்றன. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் சில படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றாலும் சில படங்கள் போதிய வரவேற்பை பெறாமல் தோல்வி அடைகின்றன.
இந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான ஒரு தமிழ் படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது. அது எந்த படம் தெரியுமா?
2024 இன் மிகப்பெரிய தோல்வி படம்
வெற்றி இயக்குனராக கருதப்படும் இயக்குனர் இயக்கிய இந்த படத்தில் மிகப்பெரிய நடிகர் நடித்திருந்தார். மேலும் ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். ஆனால் இப்படம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.
எனவே பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரால் இயக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டது. இந்த படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க படக்குழுவினர் ஆர்வமாக உள்ளனர்.
இந்தியன் 2 படம் தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஃப்ளாப் படமாகும். 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான இந்தியன் படத்தின் தொடர்ச்சி தான் இந்தியன் 2 ஆகும். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, இந்தியன் 2 படம் உருவாக்கப்பட்டது, ஆனால் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்திற்கு கிடைத்த வரவேற்போ வெற்றியோ இந்தியன் 2 படத்திற்கு கிடைக்கவில்லை.
இந்தியன் 2 ஒரு ஆக்ஷன் த்ரில்லராக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால். பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது.
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ஜேசன் லம்பேர்ட், குல்ஷன் குரோவர், பாபி சிம்ஹா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருந்தனர்.. இருப்பினும், கமல்ஹாசனின் நட்சத்திர அந்தஸ்தால் கூட படத்தை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.
தென்னிந்தியாவில் மட்டுமல்லாது ஹிந்தி சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார். தனது அசாத்திய நடிப்பு மற்றும் தனித்துவமான பாணியால் அறியப்பட்ட கமல், VFX தொழில்நுட்பம் பிரதானமாக வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தனது பாத்திரங்களை பரிசோதிப்பதற்காக அறியப்பட்டவர். அவர் தனது தொழில் வாழ்க்கையில் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார்.
ஆனால் இந்தியன் 2 2024 இல் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இந்தியாவில் வெறும் ரூ.81 கோடி மட்டுமே வசூல் செய்தது. உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இதனிடையே இயக்குனர் எஸ். ஷங்கர் இந்தியன் 3 குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். ஆனால் இந்த முறை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2025-ம் ஆண்டில் இந்தியன் 3 படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.