நடிகர் அஜித்குமார் கடந்த 2000-ம் ஆண்டு நடிகை ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து கரம்பிடித்தனர். நடிகை ஷாலினி தமிழில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் அறிமுகமான பின்னர் நடிகர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தார். அப்படத்தின் போது தான் அஜித் - ஷாலினி இடையே காதல் மலர்ந்தது. அப்பட ஷூட்டிங் சமயத்தில் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி அப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்றபின் திருமணம் செய்துகொண்டனர்.
24
Ajith wife Shalini
அஜித் உடனான திருமணத்துக்கு பின்னர் மணிரத்னத்தின் அலைபாயுதே, பிரசாந்த் ஜோடியாக பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்த ஷாலினி, அதன் பின்னர் சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகினார். உச்ச நடிகையாக இருக்கும் போதே சினிமாவில் இருந்து விலகிய ஷாலினி இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். அஜித் - ஷாலினி ஜோடிக்கு கடந்த 2008-ம் ஆண்டு அனோஷ்கா என்கிற பெண் குழந்தை பிறந்தது.
இதன்பின்னர் 7 ஆண்டுகள் கழித்து ஆத்விக் என்கிற மகனும் இந்த ஜோடிக்கு பிறந்தார். சினிமாவில் கடந்த 22 ஆண்டுகளாக நடிக்காவிட்டாலும் ஷாலினிக்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த அளவு தன் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இந்த நிலையில், இன்று நடிகை ஷாலினி தன் 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
44
Ajith Shalini Age Difference
இதனிடையே நடிகர் அஜித் - நடிகை ஷாலினி ஜோடி இடையேயான வயது வித்தியாசம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகை ஷாலினி தன்னுடைய 20 வயதிலேயே அஜித்தை கரம்பிடித்தார். அப்போது அஜித்துக்கு வயது 29. இவர்கள் இருவருக்கும் இடையே 9 வயது வித்தியாசம். தற்போது அஜித்துக்கு 53 வயதும், ஷாலினிக்கு 44 வயதும் ஆகிறது. வயது ஏறினாலும் அவர்கள் இருவரின் காதல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.