தளபதி விஜயை விட அதிக சம்பளம்.. புஷ்பா 2 நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Nov 20, 2024, 11:31 AM IST

புஷ்பா 2 படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம் தென்னிந்திய நடிகர்களில் யாரும் வாங்காத அளவுக்கு அதிகமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் தளபதி 69 பட சம்பளத்தை விட அதிகம். புஷ்பா 2வில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

PREV
15
தளபதி விஜயை விட அதிக சம்பளம்.. புஷ்பா 2 நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Pushpa 2 Cast Salary

2021ல் வெளியான புஷ்பா: தி ரைஸ் படத்திற்குப் பிறகு, புஷ்பாவின் 2ம் பாகமான தி ரூல் படம் வரும் டிசம்பர் 5ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாக உள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 ட்ரைலர் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது.

25
Pushpa 2

இந்த நிலையில் புஷ்பா படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. புஷ்பா 2 நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் உறுப்பினர் அல்லு அர்ஜுன் என்பதில் சந்தேகமில்லை.  இப்படம் ஏற்கனவே ரூ.500 கோடி பட்ஜெட்டுக்கு எதிராக ரிலீஸுக்கு முந்தைய வியாபாரத்தில் ரூ.1085 கோடிகளை வசூலித்துள்ளது.

35
Allu Arjun Salary

பிரேக்ஈவன் இலக்கு உலகளவில் ரூ.1200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.  அல்லு அர்ஜுன் தனது சம்பளமாக ₹300 கோடியை பாக்கெட் செய்து, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகையானது, தளபதி 69 படத்திற்காக நடிகர் விஜய் சம்பாதித்த ரூ.275 கோடிகளைத் தாண்டி அமைந்துள்ளது.

45
Fahadh Faasil Salary

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார் நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா படத்தில் மிரட்டிய முக்கிய கேரக்டரான பகத் பாசிலும் புஷ்பா 2வில் பெரும் சம்பளத்தை பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

55
Sukumar Salary

முதல் பாகத்துக்கு ரூ.3.5 கோடி சம்பளம் பெற்ற பகத் பாசில், புஷ்பா 2விற்கு 128% சம்பள உயர்வைப் பெற உள்ளார். அதன் தொடர்ச்சியாக அவரது சம்பளம் ரூ.8 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுகுமார் ரூ.15 கோடியும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ரூ.5 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர்.

காத்துவாங்கும் கங்குவா; அதற்குள் 600 கோடி பட்ஜெட்டில் அடுத்த வரலாற்று படத்துக்கு ரெடியாகும் சூர்யா?

Read more Photos on
click me!

Recommended Stories