தொடர் தோல்வி; ஹீரோவில் இருந்து வில்லனாக மாறிய ஜெயம் ரவி - அதுவும் எஸ்.கே படத்திலா!

First Published | Nov 20, 2024, 10:52 AM IST

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள பிரம்மாண்ட திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதா பேச்சு அடிபடுகிறது.

Jayam Ravi, Sivakarthikeyan

தமிழ் திரையுலகில் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவி, கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனாலும் அது மல்டி ஸ்டார் படமாகும். அவர் சோலோ ஹீரோவாக நடித்து கடைசியாக வெற்றிபெற்ற படம் என்றால் அது கோமாளி தான். அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஒரு ஹிட் படம் கூட ஜெயம் ரவி கொடுக்கவில்லை.

Jayam Ravi

கோமாளி படத்துக்கு பின்னர் அவர் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்த பூமி, அகிலன், இறைவன், சைரன், பிரதர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இதுதவிர அவர் லைன் அப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கிய காதலிக்க நேரமில்லை படம் உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜீனி என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... 50 கோடி முதல்; 300 கோடி வரை - சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக்கிய டாப் 4 படங்கள்!

Tap to resize

SK 25 Movie Villain Jayam Ravi

மேலும் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இப்படி ஹீரோவாக நடித்து வரும் ஜெயம் ரவி, விரைவில் வில்லனாகவும் அவதாரம் எடுக்க உள்ளாராம். அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ள எஸ்.கே.25 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Actor Jayam Ravi

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜை தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வைக்கும் ஐடியாவில் இருந்தார் சுதா கொங்கரா. ஆனால் லோகி தனக்கு அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் நடிக்க மறுத்துவிட்டார். அவர் நோ சொன்னதால் அந்த வாய்ப்பு தற்போது ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி, கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் ஹீரோவில் இருந்து வில்லனாக மாறி வெற்றிகண்ட நிலையில், ஜெயம் ரவிக்கும் அந்த லக் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... 7 மாதத்தில் பிரிந்த 4 பிரபலங்கள் – ஜிவி பிரகாஷ் முதல் ஏஆர் ரஹ்மான் வரை; 2024ல் நடந்த விவாகரத்துகள்!

Latest Videos

click me!