கர்நாடகாவில் வாஷ் அவுட் ஆன கங்குவா; எல்லாத்துக்கும் காரணம் ஷிவராஜ்குமார் தானாம்!

First Published | Nov 20, 2024, 9:33 AM IST

கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவராஜ்குமார், சூர்யா நடித்த கங்குவா படத்தை தில்லாக எதிர்த்து வெற்றிகண்டுள்ள சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

kanguva, Shiva Rajkumar

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ஷிவ ராஜ்குமார். இவர் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் தன்னுடைய மாஸான கேமியோவால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷிவ ராஜ்குமாருக்கு தமிழ் படங்களில் நடிக்க அதிகளவிலான வாய்ப்புகள் குவிந்து வண்ணம் உள்ளன. அந்த வகையில் இவர் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.

kanguva

ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு தன் கை நழுவி சென்றுவிட்டதாக ஷிவ ராஜ்குமாரே சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார். இந்த நிலையில், சூர்யாவின் கங்குவா படத்திற்கு எதிராக  அவர் செய்த சம்பவம் தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. சூர்யா நடித்த கங்குவா படம் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்திற்கு கர்நாடகாவிலும் எதிர்பார்ப்பு இருந்ததால் அங்கும் அதிகளவிலான தியேட்டர்களில் கங்குவாவை ரிலீஸ் செய்தனர்.

இதையும் படியுங்கள்... இப்படி மட்டும் செஞ்சிடாதீங்க! 'கங்குவா' குறித்து இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கை!

Latest Videos


Shiva Rajkumar

கங்குவா படத்துக்கு பயந்து சில கன்னட படங்கள் தள்ளிவைக்கப்பட்டாலும், அதை தில்லாக எதிர்த்த ஒரே ஒரு நடிகர் ஷிவ ராஜ்குமார் தான். அவர் நடித்த பைரதி ரனகள் என்கிற திரைப்படம் கங்குவாவுக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. அப்படத்திற்கு பிற மாநிலங்களில் தியேட்டர் கிடைக்காததால் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் செய்தனர். இது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான முஃப்தி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படம் தான் தமிழில் பத்து தல என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

Bhairathi Ranagal

கங்குவா படத்தை தில்லாக எதிர்த்து தனது பைரதி ரனகள் படத்தை வெளியிட்ட ஷிவ ராஜ்குமாருக்கு பாக்ஸ் ஆபிஸிலும் ஜாக்பாட் அடித்துள்ளது. ஏனெனில் கங்குவா படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் அப்படத்தை கர்நாடகாவில் கிட்டத்தட்ட வாஷ் அவுட் செய்துவிட்டது ஷிவ ராஜ்குமாரின் பைரதி ரனகள் படம். இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. விரைவில் இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்... காத்துவாங்கும் கங்குவா; அதற்குள் 600 கோடி பட்ஜெட்டில் அடுத்த வரலாற்று படத்துக்கு ரெடியாகும் சூர்யா?

click me!