
List of Celebrities Divorce in 2024 : சமீபகாலமாக இந்தியாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் விவாகரத்து சம்பங்கள் அதிகரித்து வருகிறது. பல அடுக்கடுக்கான காரணங்களை முன்னிறுத்தி பிரபலங்கள் பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களைத் தான் ரோல் மாடலாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது அவர்களே விவாகரத்து என்ற ஒன்றை கையிலேயே வைத்துக் கொண்டு சுற்றி திரிவது போன்று அடுத்தடுத்து விவாகரத்து அறிவித்து வருகின்றனர்.
விவாகரத்து ஈஸி தான் ஆனால், அதன் பிறகு உள்ள கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் கொடுமையான விஷயம். ஏனென்றால் ஆஸ்கர் வென்ற் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தம்பதியினரே 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு இப்போது முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். இது தான் இப்போது உலகளவில் ஹாட் டாப்பிக். அவர்கள் மட்டுமின்றி 2024ல் ஜெயம் ரவி தன்னோட மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார்.
இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவி நடாஷா ஸடான்கோவிச்சை பிரிவதாக அறிவித்தார். அதற்கும் முன்னதாக சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அமலா பால் மற்றும் ஏ எல் விஜய், சமந்தா மற்றும் நாக சைதன்யா, சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஸ்வின் ராம்குமார், பிரபு தேவா மற்றும் ராம்லாத் என்று இத்தன பிரபலங்கள் மட்டும் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் சாய்ரா பானு மற்றும் ஏ ஆர் ரஹ்மான் உள்பட 4 பிரபலங்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.
ஜிவி பிரகாஷ் – சைந்தவி: 11 ஆண்டு
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தான் சிறு வயது முதல் காதலித்து வந்த பின்னணி பாடகியான சைந்தவியை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 11 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தன்னுடைய மனைவி சைந்தவியை பிரிவதாக மே 13 ஆம் தேதி அறிவித்தார்.
ஹர்திக் பாண்டியா – நடாஷா ஸ்டான்கோவிச்: 4 ஆண்டு
இந்திய அணி வீரரான ஹர்திக் பாண்டியா செர்பியா நாட்டைச் சேர்ந்த மாடலிங்கான நடாஷா ஸ்டான்கோவிச்சை கடந்த 2020 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு ஜூலை 18ஆம் தேதி பாண்டியா தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். அதற்கும் முன்னதாக ஷிகர் தவான், முகமது ஷமி, சானியா மிர்சா ஆகியோர் விளையாட்டு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஜெயம் ரவி – ஆர்த்தி: 15 ஆண்டு
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி 15 ஆண்டு கால திருமண வாழ்கைக்கு பிறகு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ‘வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. நீண்ட கால யோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
ஏ ஆர் ரஹ்மான் – சாய்ரா பானு: 29 ஆண்டு
இந்தப் பட்டியலில் இப்போது இணைந்திருப்பது ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தான். 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு இப்போது சாய்ரா பானு தன்னுடைய கணவர் ஏ ஆர் ரஹ்மானை பிரிவதாக அறிவித்துள்ளார். விவாகரத்து குறித்து சாய்ரா பானு கூறியிருப்பதாவது: திருமணமாகி பல வருடங்கள் கழித்து தனது கணவர் ஏ ஆர் ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவானது தங்களது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்திறுகு பிறகு ஏற்பட்டது. மிகுந்த வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் தங்களுக்கான தனிமையை கொஞ்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.