நயன்தாராவின் காதல் கல்யாண காட்சிக்கு நெட்பிளிக்ஸ் எத்தனை கோடி கொடுத்துருக்கு தெரியுமா?

First Published | Nov 20, 2024, 11:07 AM IST

Nayanthara Documentary Netflix Deal Price : நயன்தாரா நடிப்பில் வெளியான ஆவணப்படத்துக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் எத்தனை கோடி கொடுத்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Nayanthara Documentary Netflix Deal Price

நயன்தாராவில் நடிப்பில் உருவான நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற ஆவணப்படம் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இதில் 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி, ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆனந்தராஜ், மன்சூர் அலி கான் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

Nayanthara: Beyond The Fairy Tale

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. நயன்தாராவுக்கு இது டர்னிங் பாய்ண்டாக இருந்தது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த காட்சியை தன்னுடைய ஆவணப்படத்தில் நயன்தாரா முறையான அனுமதி இல்லாமல் பயன்படுத்தியிருக்கிறார். அந்த ஆவணப்படத்தின் டிரைலரை நெட்பிளிக்ஸ் வெளியிடவே அதனைப் பார்த்த தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பினார்.

Tap to resize

Nayanthara Netflix Deal Price

இதனால் ஆத்திரமடைந்த நயன் தாரா 3 பக்க நீளத்துக்கு அறிக்கை வெளியிட்டார். இதில் தனுஷ் சினிமா பின்புலத்திலிருந்து வந்தார் என்றும், தான் தனது கடின உழைப்பால் உயர்ந்து இந்த நிலைக்கு வந்ததாக கூறிய நயன்தாரா நீங்கள் அனுப்பிய சட்ட ரீதியிலான நோட்டீசை நானும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறியிருந்தார். நயன் தாராவுக்கு ஆதரவாக அவரது கணவர் விக்னேஷ் சிவனும் தனுஷின் அறிக்கையை பகிர்ந்து அவர் பேசிய பழைய வீடியோவையும் வாழு வாழ விடு என்ற கேப்ஷனில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் பிறகு அந்த வீடியோவை விக்னேஷ் சிவன் நீக்கினார்.

Nayanthara Netflix Salary, Nayanthara Documentary Netflix

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பகிர்ந்த அறிக்கையை லைக் செய்து ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா ராஜேஷ், நஸ்ரியா ஆகியோர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். நயன் தாராவின் அறிக்கைக்கு தனுஷ் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் காதல் முதல் கல்யாணம் வரையிலான வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆவணப்படம் நயன்தாராவின் 40ஆவது பிறந்தநாளான 18ஆம் தேதி வெளியானது.

Nayanthara Documentary Movie, Nayanthara Documentary Netflix,

அமித் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, அவரது அம்மா ஓமனா குரியன், சகோதரர் லெனு குரியன், கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைந்து ராதிகா சரத்குமார், நாகார்ஜுனா, டாப்ஸி, ராணா டகுபதி, தமன்னா, விஜய் சேதுபதி ஆகியோர் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 22 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட நயன்தாராவின் ஆவணப்படம் பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை. முதல் பாதி நன்றாக இருந்தாலும், 2ஆம் பாதி கிரிஞ்சான காட்சிகளுடன் வந்துள்ளது. எமோஷனல் காட்சிகள் பெரியளவில் ஒர்க் அவுட்டாகவில்லை என்று பலரும் பல விதமாக விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.

Nayanthara, Nayanthara filmography

சினிமாவ பொறுத்த வரையில் யாருமே ஆதாயம் இல்லாமல் இருக்கமாட்டங்க. அது போலத்தான் நயன்தாராவும். அவர் நெட்பிளிக்ஸில் தன்னுடைய ஆவணப்படத்தை எத்தனை கோடிக்கு விற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு ரூ.25 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் ரூ,80 கோடி முதல் ரூ.100 கோடி வரையில ஆவணப்படத்திற்கு வாங்கியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Nayanthara Netflix Deal Price, Nayanthara: Beyond The Fairy Tale

எனினும் இதில் அதிகாரப்பூர்வ தகவல் இல்லையென்றாலும் கூட ரூ.20 முதல் ரூ.30 கோடி வரையில் நயன்தாரா தனது ஆவணப்படத்திற்கு வாங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Latest Videos

click me!