கிழக்கே போகும் ரயிலில் ஆரம்பிச்ச வாழ்க்கை – ராதிகா சரத்குமார் எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா?

First Published | Nov 20, 2024, 12:50 PM IST

Radhika Sarathkumar Net Worth : நடிகை ராதிகா சரத்குமாரின் மொத்த சொத்த மதிப்பு எத்தனை கோடி என்ற விவரங்களை இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Radhika Sarathkumar filmography, Radhika Sarathkumar Net Worth

Radhika Sarathkumar Net Worth : சினிமா பின்னணியை வைத்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ராதிகா சரத்குமார். நடிகர் எம்.ஆர்.ராதா மற்றும் கீதாவின் மகள் தான் ராதிகா. எம்.ஆர்.ராதா சென்னையைச் சேர்ந்த தெலுங்கு பேசக் கூடியவர். கீதா இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக் கூடியவர். இந்தியா, இலங்கை மற்றும் லண்டனில் படித்த ராதிகா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

Radhika Sarathkumar House, Radhika Sarathkumar Car Collection

இயக்குநர் பாதிராஜா இயக்கத்தில் ராதிகா முதல் முறையாக சினிமாவில் அறிமுகமான படம் கிழக்கே போகும் ரயில். இதில் நடிகர் சுதாகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் கொடுத்த வரவேற்பு அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்தார். அதன் பிறகு ஒரே வருடத்தில் அவரை விவாகரத்தும் செய்து ரிச்சர்டு ஹார்டியை 2ஆவது திருமணம் செய்தார்.

Tap to resize

Radhika Sarathkumar Personal Life, Kizhakke Pogum Rail

2 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரையும் விவாகரத்து செய்துவிட்டு 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். ராதிகாவுக்கு ராயனே ஹார்டி என்ற மகள் இருக்கிறார். அவர் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமண்ம் செய்து கொண்டார். தேசிய விருது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில விருது என்று பல விருதுகளை வென்றுள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியிருக்கிறார். நடிகையையும் தாண்டி தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்துள்ளார்.

Radhika Parents, Radhika Husband, Radhika Daughter Rayane

சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி என்ற தொலைக்காட்சி தொடரை ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தில் 51.42 சதவிகித பங்கு இவருடையது தான். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் விளம்பரதாரராக ராதிகா இருக்கிறார். இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கிய ராதிகா சரத்குமார் அரசியலிலும் கால் பதித்துள்ளார். கடந்த தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை கண்டார்.

Radhika Sarathkumar Son, Radhika Sarathkumar House

ஆரம்பத்தில் தனது கணவரின் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்தார். அதன் பிறகு அதிமுகவில் இணைந்த ராதிகா கடைசியாக இருந்த கட்சி திமுக. இப்போது அவர் இருக்க கூடிய கட்சி பாஜக. கடந்த 17 ஆண்டுகளில் 4 கட்சி தாவியிருக்கிறார். மக்களவை தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணாப் பத்திரத்தில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.53.45 கோடி இருப்பதாக கூறியிருக்கிறார்.

Radhika Sarathkumar Net Worth, Radhika Sarathkumar filmography

இதில், ரூ.33.01 லட்சம், 750 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆபரணங்கள் உட்பட மொத்தமாக ரூ.27,05,34,014 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், ரூ.26,40,00,000 மதிப்புள்ள அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறியுள்ளார். அதோடு ரூ.14.79 கோடி கடனும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

Latest Videos

click me!