ஹைதராபாத்தில் தஞ்சம்; நடிகை கஸ்தூரி சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி தரும் தகவல்கள்!

By Ansgar R  |  First Published Nov 17, 2024, 5:48 PM IST

Actress Kasthuri : பிரபல நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த நிலையில் தமிழக போலீசாரால் அவர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.


அவ்வப்போது தன்னுடைய சர்ச்சையான பேச்சுகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரபல நடிகை கஸ்தூரி, அதிரடியாக ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமரன் திரைப்படம் வெளியான நேரத்தில் தொடர்ச்சியாக பல பொது இடங்களில் குறிப்பிட்ட சமூகம் குறித்த கருத்துக்களை தொடர்ச்சியாக நடிகை கஸ்தூரி வெளியிட்டு வந்தார். 

இப்படி அவர் பேசி வருகையில், தெலுங்கு மொழி பேசும் பெண்கள் குறித்தும், தெலுங்கர்கள் குறித்தும் ஆபாசமான முறையில் பேசியது தமிழக அளவை தாண்டி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்பாக சென்னை எழும்பூரில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் கஸ்தூரிக்கு எதிராக ஏழு வழக்குகள் பதிவான நிலையில், அதில் நான்கு வழக்குகளில் அவர் ஜாமீனில் வெளிவராத முறையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

"அதெல்லாம் நல்லா தொல்லை கொடுப்பார்" தனுஷ் நயன்தாரா விவகாரம் - மீண்டும் ஆக்ஷனில் இறங்கிய சுசித்ரா!

இந்த சூழலில் தன்னை கைது செய்யபோகும் விஷயம் தெரிந்த நடிகை கஸ்தூரி, போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியானது. அதன்படியே போயஸ் கார்டன் சென்ற தமிழக போலீசாருக்கு பூட்டி இருந்த வீடும், கஸ்தூரி உள்ளூரில் இல்லை என்கின்ற செய்தியும் தான் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களிலும் கஸ்தூரியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த சூழலில் தயாரிப்பாளர் ஒருவருடைய உதவியோடு, நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து அங்குள்ள போலீசாரின் உதவியுடன் தமிழக போலீசார் இரண்டு பிரிவுகளாக கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த சூழலில் தயாரிப்பாளர் ஒருவருடைய வீட்டில் கஸ்தூரி இருப்பது தெரிய வந்தது. தொடர்ச்சியாக நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்ய சென்ற பொழுது, கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு நீண்ட நேரம் அவர் திறக்காமலேயே இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார், இப்போது நீங்களாக வெளியே வரவில்லை என்றால், கதவை உடைக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்து இருக்கின்றனர். 

போலீசாரின் அந்த ஒரு எச்சரிக்கைக்கு பிறகு தான் நடிகை கஸ்தூரி கதவை திறந்து வெளியே வந்ததாகவும், தான் எப்போதும் பயன்படுத்தும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான தயாரிப்பாளர்களுடைய செல்போனை தான் கஸ்தூரி பயன்படுத்தி வந்தார் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த அவர் வெளியே எங்கும் செல்லாமல் தயாரிப்பாளரின் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவே சென்னை அழைத்துவரப்பட்ட நடிகை கஸ்தூரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருக்கிறார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியல் அராஜகம் ஒழிக.. நீதி வெல்லட்டும் என்று கூறிச்சென்றது குறிப்பிடத்தக்கது. 

2026 தேர்தலில் நாம யாருன்னு காட்டுவோம்! களமிறங்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி! எந்த தொகுதியில்? பா.ரஞ்சித் பரபர!

click me!