சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில், பிரபல வெள்ளித்திரை ஹீரோ அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் யார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சன் டிவி தொலைக்காட்சியில், டிஆர்பி-யில் பட்டையை கிளப்பி வரும் சீரியல் கயல். கடந்த 2021-ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய இந்த சீரியல், வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்தும் TRP-யில் டாப்பில் உள்ளது.
24
Tamil Serial
கயலுக்கு எப்போது திருமணம் நடக்கும் என, பல ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருந்த நிலையில், ஒருவழியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. கயல் திருமணம் முடிந்து விட்டதால், சீரியலுக்கு எண்டு கார்டு போட்டு விடுவார்களோ என, பல ரசிகர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தி வந்த நிலையில்... மீண்டும் புதிய கோணத்தில் இந்த தொடர் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
அதாவது தன்னுடைய தந்தையின் பெயரில் உள்ள கெட்ட பெயரை நீக்க சொந்த கிராமத்திற்கு செல்லும் கயலுக்கு அங்கு பேரதிர்ச்சி கார்த்திருக்கிறது. கயலின் தந்தை கொடுத்த வாக்கை நம்பி சிறு வயதில் இருந்து அவரையே நினைத்து கொண்டு வாழும், ஒரு சிறப்பு தோற்றம் இந்த சீரியலில் இடம்பெற உள்ளது. இதில் நடிப்பது வேறு யாரும் அல்ல, தமிழில் பட்டதாரி, மாயநதி, உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் விஜய் விஷ்வா தான்.
44
Kayal Serial Special Appearance
திரைப்படங்களில் ஒரு பக்கம் பிஸியாக இவர் நடித்து கொண்டிருந்தாலும்... நட்பின் அடிப்படையில் இந்த சீரியலில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என கேட்டு கொண்டதற்காக, கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கயலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் இவருக்கு, கயலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என தெரியவந்தால் என்ன நடக்கும்? இதனால் கயலுக்கு எந்தமாதிரி பிரச்சனை வரும், அதை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.