பள்ளியில் மாணவர்கள் முன் ஆசிரியை குத்தி கொலை.! நடந்தது என்ன.? வெளியான ஷாக் தகவல்

First Published | Nov 20, 2024, 2:54 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை ரமணி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். திருமணத்தை நிராகரித்ததால், மதன் என்பவர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

ஆசிரியை கொலை

அரசு பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண் ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்  ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பணியில் சேர்ந்துள்ளார்.

இதே பகுதியை சேர்ந்த மதன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் ரமணியை திரும்ணம் செய்வதற்காக மதன், தனது குடும்பத்தாதிரிடம் சொல்லி பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் ரமணி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மதன் இன்று காலை பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்த ரமணியின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.
 

பள்ளி வளாகத்தில் ஆசிரியை குத்தி கொலை

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கத்தி கூச்சல் போட்டுள்ளனர். உடனடியாக ஆசிரியை ரமணியை மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக  சேதுபாவாசத்திரம் காவல்துறையினர்  விரைந்து வந்து கொலையாளி மதனை கைது செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில்  திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஆசிரியை ரமணியை குத்திக் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Latest Videos


பள்ளியில் நடந்தது என்ன.?

இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி முதன்மை கல்வி அலுவலருக்கு அளித்துள்ள அறிக்கையில், இப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் 10-06-2024 முதல் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியராக செல்வி. ரமணி என்பவர் 6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை தமிழ் பாடம் போதித்து வந்தார் .

அன்னாருக்கு முதல் பாடவேலையில் வகுப்பு கிடையாது என்பதால் அவர் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையில் இருந்து வந்தார் 20-11-2024 அன்று காலை 10:10 மணிளவில் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையின் வரண்டா பகுதியில் சின்னமனையை சேர்ந்த மதன் என்பவர் ஆசிரியை ரமணியுடன் நின்று பேசி கொண்டிருந்தான். 

எடப்பாடி கண்டனம்

எதிர்பாரத விதமாக ஆசிரியர் ரமணியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தான் அவனை இப்பள்ளியின் ஆசிரியர்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.  ஆசிரியர் ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார் இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவுக்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.

Anbil Mahesh

கடுமையான நடவடிக்கை

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளவர்,
ஆசிரியர் ரமணியின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது.

தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர்  மணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கூறியுள்ளார். 

click me!