குளித்தலை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விஏஓவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
குளித்தலை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விஏஓவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் சிவாயம் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக அன்புராஜ் (36) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் திருமணமான பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அன்புராஜ் ஒரு பெண்ணின் வீட்டின் பின்புற வாசல் வழியாக அத்துமீறி உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதையும் படிங்க;- கணவரை கழற்றிவிட்ட உஷாவை உஷார் செய்த கள்ளக்காதலர்கள்! உல்லாசத்திற்கு போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி
இதனை சற்றும் எதிர்பாராத பெண் அலறி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து அவரை ரவுண்டு கட்டி அடித்து திட்டி அனுப்பி உள்ளனர். இதையடுத்து சம்பவம் நடந்த மறுநாள் அந்த பெண் கடைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணை வழிமறித்த அன்புராஜ் புகார் ஏதும் கொடுத்தால் உன்னையும், உனது கணவரையும் அடியாட்கள் வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- என் புருஷன நினைச்சு தான் நீங்க இரவில் தூங்கணும்.. மாணவிகளை மருமகளாக பாவித்த ஆசிரியைக்கு ஆப்பு..!