Jan 4, 2025, 6:25 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் சார் என்று யாரிடமோ பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறினார். இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்தி விசாரணையில், சார் ஒருவரிடம் ஞானசேகரன் தொடர்பு கொண்டார். அந்த சாருடன் இருக்குமாறு அவர் என்னிடம் கூறினார் என பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதிப்படுத்தியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.