Online Scam Alert : கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த 25 வயதுடைய இளம் பெண் ஒருவர் சுமார் 2 லட்சம் ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளார்.
வளர்ந்துவிட்ட இந்த டிஜிட்டல் யுகத்தில், மக்கள் வேகமான வாழ்க்கை முறையை தான் வாழ்ந்து வருகின்றனர். வேண்டியது எல்லாமே ஒரு கிளிக்ஸ் கிடைத்துவிடும் இந்த காலகட்டத்தில் சங்கடங்களும், பணம் மோசடியும் கூட ஒரே ஒரு கிளிக்கில் நடந்து முடிகிறது என்பது தான் வேதனை தரும் விஷயம். இந்த சூழலில் கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை, ஆன்லைன் வேலை சம்மந்தமான மோசடியில் சுமார் 1.94 லட்சம் ரூபாயை இழந்ததாக பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட 25 வயதான அர்ச்சனா என்ற அந்த இளம் பெண், பகுதி நேர வேலைக்காக ஆன்லைனில் தேடும் போது, அப்படி பட்ட ஒரு வேலை தொடர்பான இன்ஸ்டாகிராமில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தபோது தனக்கு இந்த சோகம் நேர்ந்ததாக கூறியுள்ளார்.
அந்த இளம் கடந்த சில காலமாகவே ஒரு நல்ல பகுதி நேர வேலைவாய்ப்பை தேடிவருவதாக கூறப்படுகிறது. அப்படி அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்த ஒரு பகுதி நேர வேலைவாய்ப்பு குறித்த லிங்கை அவர் கிளிக் செய்துள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததை தொடர்ந்து, அவருக்கு வாட்ஸ் அப் மூலம் சில குறுஞ்செய்திகள் வர தொடங்கியுள்ளது. அதில் சிறந்த பகுதி நேர வேலை வாய்ப்புக்கான "Amazon Freshers Job in India" மூலம் வேலை செய்து அதிக பணத்தை ஈட்டலாம் என்றும். அதில் அவர் ஒரு தொகையை முதலீடு செய்தால், பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்றும் அந்த குறுஞ்செய்தியில் வந்த செய்திகள் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு இதுதான்! ஹேக் செய்ய 1 நொடி கூட ஆகாது!
அமேசான் தளத்தில் முதலீடு செய்வது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்பிய அந்த பெண், தொடர்ச்சியாக போலி ஆசாமிகள் கொடுத்த பல்வேறு யுபிஐ ஐடிகளுக்கு பணத்தை செலுத்த தொடங்கி இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட ஆறு நாட்களில் அந்த பெண் பல்வேறு யுபிஐ களுக்கு தன்னுடைய கணக்கில் இருந்து சுமார் 1.94 லட்சம் ரூபாய் வரை செலுத்தி இருக்கிறார். இருப்பினும் அவர் செலுத்திய பணத்திற்கான அத்தாட்சியோ, அல்லது முதலீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்தோ அவருக்கு எந்தவித தகவல்களும் இந்த ஆறு நாட்களில் அனுப்பி வைக்கப்படவில்லை.
ஆறு நாட்களாக தான் செலுத்திய பணத்திற்கு எந்த விதமான ரசீதுகளோ அல்லது தன்னுடைய பணம் எதில் முதலீடு செய்யப்படுகிறது என்கின்ற விவரமோ அல்லது அமேசான் கணக்கில் இருந்து எந்த விதமான பதிலோ அவருக்கு வராத நிலையில், ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்திருக்கிறது. கிட்டத்தட்ட தன்னுடைய சேமிப்பில் இருந்த 1.94 லட்சத்தை இழந்த அந்த பெண், பெங்களூரு போலீசில் புகார் அளித்த நிலையில் இப்போது அவருடைய புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு சைபர் கிரைம் போலீசார் இது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.
எளிய முறையில் சீக்கிரமாக பணம் ஈட்ட வேண்டும் என்கின்ற ஆசை இளைஞர்களுக்கு இருப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும், இப்படி கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை ஒரே ஒரு கிளிக் மூலம் இழந்து தவிப்பது பெரும் கவலைகளை ஏற்படுத்துகிறது. தினமும் இந்திய அரசும், போலீசாரும் இப்படிப்பட்ட பல்வேறு வகையான இணைய மோசடிகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டுதான் வருகிறார்கள். மக்கள் தொடர்ச்சியாக அதில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள் என்பதை யாரும் மறக்கக்கூடாது.
ஐடிஆர் தாக்கல் காலக்கெடு : இன்றைக்குள் இதை செய்ய தவறினால் ரூ.5000 அபராதம்!