பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

Jan 4, 2025, 5:39 PM IST

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம் கொடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டும் வழங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு  உள்ளிட்டவை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.