
நடிகர் மோகன்பாபுவின் மகன், விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமாக உருவாகி வருகிறது கண்ணப்பா. ஏ வி ஏ என்டர்டைன்மெண்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் தென்னிந்திய திரை உலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களும், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குறிப்பாக மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், மோகன் பாபு, சரத்குமார், மதுபாலா, முகேஷ் ரிஷி, கருணாஸ், யோகி பாபு, ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட நடிகர்கள் வரலாற்று கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தில் நடித்து வரும் ப்ரீத்தி முகுந்தன், பிரபாஸ், அக்ஷய் குமார், விஷ்ணு மஞ்சு, போன்ற நடிகர்களின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... இதைத்தொடர்ந்து தற்போது பார்வதி தேவியாக நடித்து வரும், காஜல் அகர்வாலின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
மயங்கி விழுந்த கங்கை அமரன்! திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளை நிற பட்டு புடவையில், இமயமலை அடிவாரத்தில்... ஒரு பாறை மீது காஜல் அகர்வால் அமர்ந்திருப்பது போல் உள்ளது. அவரின் பின் புறத்தில் மஹா காளியின் அவதாரம் புகைமூட்டத்துடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் காஜல் அகர்வால், பார்வதி தேவியின் வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து, இந்தாண்டு கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 25-ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 100 முதல் 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு, Sheldon Chau என்பவர் ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டீபன் தேவசி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம், குறித்து அவ்வபோது தொடர்ந்து அப்டேட்சை வெளியிட்டு வரும் படக்குழு, அதன் தொடர்ச்சியாகவே இப்போது காஜல் அகர்வாலின் பாஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் 'கண்ணப்பா' வேடத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். இந்த படத்தை முகேஷ் குமார் சிங் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸின் நாக் அவுட்! 2 பேரை காலி பண்ண உள்ளே வரும் EX போட்டியாளர்கள் - எதிர்பாராத ட்விஸ்ட்!
'கண்ணப்பா' படம் குறித்து ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியுள்ள விஷ்ணு மஞ்சு, எந்த ஒரு லாப நோக்கத்திற்காகவும் இப்படத்தை எடுக்கவில்லை எனவும், பரமேஸ்வரனின் கட்டளையின் பேரில் கண்ணப்பாவிகாக கடுமையான உழைப்போடு இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவே எடுத்திருக்கிறோம் என தெரிவித்தார். மாபெரும் காவிய படைப்பாக உருவாகி உள்ள இந்த திரைப்படம் ஆன்மீக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.