Director Shankar
ஷங்கர் இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீசான இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்தி நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாகவும், தமிழ் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Ramcharan, Shankar, Dil Raju
கேம் சேஞ்சர் திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இப்படத்தின் பாடல் காட்சிகளை மட்டும் சுமார் 90 கோடி செலவில் படமாக்கி இருக்கிறாராம் ஷங்கர். அதிலும் அதிகபட்சமாக ஒரு பாடலுக்கு மட்டும் 23 கோடி ரூபாய் செலவில் செட் போட்டு படமாக்கி இருக்கிறார். கேம் சேஞ்சர் படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜ் எழுதியது. அவர் வாட்ஸ் அப் குரூப் வாயிலாக ஷங்கருடன் கலந்துரையாடும் போது ஷங்கருக்கும் கதை பிடித்துப் போனதால் அவர் திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் 'கேம் சேஞ்சர்'! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
Game changer Movie Director Shankar
அரசியல் கதையம்சம் கொண்ட படமாக கேம் சேஞ்சர் உருவாகி உள்ளது. இப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் சமுத்திரக்கனி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஜனவரி 10ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கேம் சேஞ்சர் படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Game Changer TN Release in Trouble
இந்நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர், இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுத்த பின்னர் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யலாம் என லைகா நிறுவனம் திரைப்பட கவுன்சிலில் முறையிட்டுள்ளதாம். மறுபுறம் ஷங்கர் தரப்பு, இந்தியன் 3 பட பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி உள்ளதால் கேம் சேஞ்சர் பட ரிலீசுக்கு பின் அதை முடித்துத் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதற்கு லைகா தரப்பு உடன்பட்டால் மட்டுமே கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஷங்கர் - ராம் சரண் இணைந்துள்ள கேம் சேஞ்சர்; கட்டாயம் பார்க்க வேண்டிய 5 காரணங்கள்!