கொரோனாவைவிட கொடூரம்... வீட்டுக்கே வரும் சீனா பார்சல் ஆபத்து... ஆபத்தை வாங்கி கட்டிக்கொள்ளாதீர்கள் மக்களே..!

அதை யாரும், நிலத்தில் பயிரிட வேண்டாம்; அது விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம்' என எச்சரித்துள்ளது. 

Worse than the Corona ... China parcel danger coming home

கொரோனாவை வூகானில் உருவாக்கி பரப்பியதே சீனாதான் என மற்ற நாடுகள் குற்றம்சாட்டி வந்தாலும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடும் மோதல்கள் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவியதை தடுக்காமல் அதனை மற்ற நாடுகளுக்கும் பரப்பி உலகத்தையே அச்சுறுத்தியது சீனா என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. சீனாவை விட பல மடங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. Worse than the Corona ... China parcel danger coming home

இந்நிலையில் தற்போது அடுத்த அதிர்ச்சியாக, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனில் உள்ள மக்களுக்கு சீன எழுத்துக்களுடன் மர்ம விதைகள் அடங்கிய, 'பார்சல்' அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு சில பார்சல்களின் வெளியே தங்க ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதை திறந்து பார்த்தால் விதைகள் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

Worse than the Corona ... China parcel danger coming home

இந்த விதைகள் உள்ள பார்சல்கள் அமெரிக்காவின் டெக்சாஸ், கொலராடோ, அலபாமா, ப்ளோரிடா, லோவா, ஜார்ஜியா, கன்சாஸ் உள்ளிட்ட, 28 மாகாணங்களை சேர்ந்த பலருக்கு, கடந்த சில நாட்களாகவே இம்மாதிரியான பார்சல்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்கா மட்டுமல்லாமல் கனடா மற்றும் பிரிட்டனிலும், இது போன்ற மர்ம விதைகள் கொண்ட பார்சல், பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணை தொழிலில் ஈடுபடும் பலருக்கும் இதுபோன்ற சீன மொழியுடைய பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

Worse than the Corona ... China parcel danger coming home

இதுகுறித்து கனடா உணவு கண்காணிப்பு அமைப்பு, 'அதை யாரும், நிலத்தில் பயிரிட வேண்டாம்; அது விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம்' என எச்சரித்துள்ளது. தெரிந்தவர்களிடம் இருந்தோ, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தோ வரவில்லை' என, அதை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், வாங் வென்பின், கூறுகையில் 'எங்களின் சீன நாடு தபால் மூலம் விதைகளை அனுப்புவது இல்லை. பார்சல்களின் மேல் உள்ள சீன தபால் முத்திரைகள் போலியானவை என, எங்கள் தபால் துறை தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக விரிவாக ஆய்வு செய்து, விபரங்களை தெரிவிப்போம்’’ எனக் கூறியுள்ளார். 

ஏற்கெனவே பலபகுதிகளில் மண் மலடாக்கப்பட்டு விட்டது. அடுத்து விவசாயத்தை அழிக்க விதைகளை அழிக்கும் உயிரிகளை அனுப்பி வைப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios