’ராவணன் சீதையை கடத்தினாரோ? இல்லையோ..? விமானத்தில் பறந்தது உண்மை...’ அடித்துக் கூறும் அதிகாரி..!

பெரும்பலான மக்கள் ராவணன் ஒரு கருணைமிக்க அரசன் எனவும் ஒரு அறிஞர் என்றும் கருதுகின்றனர். 

world first aviator five thousand years ago he initiative his voyage

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விமானியாக இருந்தவர் ராவணன், விமானத்தில் பயணம் செய்த முதல் விமானியே அவர் தான் என்று இலங்கை விமான போக்குவரத்துத் துறை துணைத் தலைவர் சசி தனதுங்க கூறியுள்ளார்.world first aviator five thousand years ago he initiative his voyage

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்துறை வல்லுநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், புவியியல் அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய விமான போக்குவரத்துத் துறை துணைத் தலைவர் சசி தனதுங்க, "ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் விமான ஓட்டியாக இருந்தவர் ராவணன். அவர் தான் முதல் விமானி. world first aviator five thousand years ago he initiative his voyage

ராமர் மனைவி சீதையை கடத்தினார் என்று கூறுவதெல்லாம் இதிகாசத்தில் கூறப்படுவது. சமீபத்தில் இலங்கையில் இருந்து ராவணன் என்ற பெயரில் ஒரு செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வானில் பறந்த முதல் நபர் அவர் தான். ஆனால், அது குறித்து ஆதாரம் எதுவும் இல்லை. இது தொடர்பாக விரைவில் ஆய்வு நடத்தி அதற்கான உரிய ஆதாரத்தை சமர்பிப்போம். ராவணன் பற்றி பல கதைகள் இருந்தாலும் விமானத்தில் அவர் பயணித்தது கதையல்ல. உறுதி. இலங்கையில் ராவணனை பலரும் கருணைமிக்க ராஜாவாகவும், அறிஞராகவுமே கருதுகின்றனர். சில இந்திய வேதங்கள் கூட அவரை மகா பிராமணர் அல்லது பெரிய அறிஞர் எனவும் கூறுகின்றன’’ என்று அவர் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios