மனைவி பிரிந்ததால் நடந்த விபரீதம்... விஷ பாம்பை கடிக்க விட்டு கணவன் தற்கொலை... 

Widow of man who filmed himself dying after letting
Widow of man who filmed himself dying after letting


மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் பிளாக் மாம்பா பாம்பை கடிக்க விட்டு கணவன் இறந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க்கைச் சேர்ந்த அர்ஸன் வலேவ். இவரது மனைவி எக்டேரினா கேத்யா. இருவரும் பாம்பு மற்றும் பூனைகள் குறித்து வீடியோவை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தனர்.

Widow of man who filmed himself dying after letting

அர்ஸன், உயிரியல் பூங்கா ஒன்றில் பணியாற்றியவர் என்பதால், விலங்குகள் குறித்த அனுபவர் உண்டு. இதன் காரணமாகவே அதிக பாம்புகள் குறித்த வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளார். கொடிய விஷம் கொண்ட பிளாக் மாம்பா என்கிற பாம்பை வைத்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. பொது இடத்தில் வைத்து தனது மனைவியை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இவரை விட்டு தனியாக சென்று யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

Widow of man who filmed himself dying after letting

எக்டேரினா கேத்யா, வேறு ஒருவருடன் சேர்ந்து வாழவும் ஆரம்பித்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் இருந்த அர்ஸன்-க்கு, இந்த விஷயம் தெரிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று தன்னுடைய யூடியூப் சேனலில், நேரலையாக வந்து பார்வையாளர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது, இன்று என்னுடைய வாழ்வின் மிக முக்கியமான நாள் என்று கூறிக் கொண்டு கேமராவை விட்டு வெளியே செல்கிறார். அப்போது ஏதோ ஒரு சத்தம் கேட்கிறது. அதன் பின் கேமரா முன் வந்த அர்ஸன், நான் கேத்யாவை மிகவும் விரும்புகிறேன். கடைசி நேரத்தில் அவளுடன் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி தன்னுடைய கையைக் காட்டுகிறார். கையில் ரத்தம் கொட்டுகிறது. 

Widow of man who filmed himself dying after letting

கையில் ரத்தம் கொட்டுவதற்கு காரணம், தான் வீட்டில் வர்த்து வந்த பிளாக் மாம்பா பாம்பை கடிக்கும்படி செய்ததுதான். உயிருக்கு போராடிட்க கொண்டிருந் அர்ஸன், கேத்யாவிடம் இதைப் பற்றி சொல்லிவிடுங்கள் என்கிறார். இதைக் கண்ட பார்வையாளர் ஒருவர், உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து மருத்துவமனை அழைத்து சென்றனர். ஆனாலும் அர்ஸன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Widow of man who filmed himself dying after letting

அர்ஸன் உயிரிழந்தது குறித்து கேத்யா கூறும்போது, எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கவில்லை... நாங்கள் பிரிந்திருந்தோம்... இப்போது வரை நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios