வெறிபிடித்த பாகிஸ்தான் ராணுவம்...!! பெண்களை கதற கதற கற்பழித்த கொடூரம்...!! தட்டிக்கேட்ட பெண்ணையும் கொலை செய்ய துடிக்கிறது..!!
பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் கோரியுள்ளது. பாகிஸ்தானுக்கு திரும்பி என்றால் உயிருக்கு ஆபத்துள்ளது எனவே இங்கேயே இருக்க அனுமதி கொடுக்கவும் பாதுகாப்பு கொடுக்கவும் அமெரிக்க சமூக ஆர்வலர்களின் உதவியை நாடியுள்ளார் குலாலாய்.
பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தின் அட்டூழியங்களை தோலுதிர்துக் காட்டிவந்த சமூக ஆர்வலர் குலாலாய் உயிருக்கு பயந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார்.பாதுகாப்பு வேண்டி அமெரிக்க நாட்டின் சமூக ஆர்வலர்களின் உதவியை அவர் நாடியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயது முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குழந்தைத் திருமணம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்க முன்பு பாகிஸ்தான் ராணுவத்தின் அந்தரங்க அட்டூழியங்களை வெளியிட்டு பகீர் கிளப்பினார். பாலியலுக்காக சொந்த நாட்டு பெண்களை வேட்டையாடும் பாகிஸ்தான் என்ற தலைப்பில் ,பாகிஸ்தான் ராணுவத்தினர் பாகிஸ்தான் பெண்களின் மீது நடத்தும் பாலியல் வன்முறைகளை புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டு அந்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இவரின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் இராணுவம் அந்தாட்டு மக்கள் கடும் கோபத்திற்கு ஆளானது. சமூக வலைதளங்களில் அப் புகைப்படங்கள் பரப்பி ராணுவத்திற்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் பெற்று தந்தார். இராணுவம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ராணுவத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டார் , வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு நாட்டிற்கு எதிராக செயல்பட்டார் என குலாலாய் மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது. அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ததுடன், அவரை நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்தது.
இந்த நிலையில் ராணுவத்திற்கு பயந்து தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார் குலாலாய், அவரை கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு போலீசார் தீவிர காட்டி வந்தனர் இந்நிலையில், கடந்த மே மாதம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் அமெரிக்காவுக்கு தப்பி சென்றார் குலாலாய். அமெரிக்காவில் அவர் தஞ்சமடைந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் போலீசார் அவரை மீண்டும் பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் கோரியுள்ளது.
பாகிஸ்தானுக்கு திரும்பி என்றால் உயிருக்கு ஆபத்துள்ளது எனவே இங்கேயே இருக்க அனுமதி கொடுக்கவும் பாதுகாப்பு கொடுக்கவும் அமெரிக்க சமூக ஆர்வலர்களின் உதவியை நாடியுள்ளார் குலாலாய். இந்நிலையில் அவருக்கு பாதுகாப்பாக அமெரக்காவில் தங்க அவருக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அந் நாட்டு சமூக ஆர்வலர்கள் முன் வந்துள்ளனர்.