“இந்தியா செய்வது தான் சரி”.... பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளும் உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர்...!
இப்படி பிரதமர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் தடை உத்தரவு தான் சிறப்பான முடிவு என்று கொரோனா வைரஸ் பிரச்சனைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.
சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 149 ஆக அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 10 லட்சத்து 83 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 738 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்த சீனாவே மீண்டும் தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் அளவிற்கு கொரோனா வைரஸ் தனது கொடூரத்தை அரங்கேற்றி வருகிறது. வல்லரசு நாடுகளே மக்களை கொரோனாவிடம் இருந்து எப்படி காப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன. இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் தான் தன் நாட்டு மக்களை காக்கும் பொருட்டு வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊடரங்கு என்ற கடினமான உத்தரவை பிறப்பித்தார் பாரத பிரதமர் மோடி அவர்கள்.
இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!
தினக்கூலி மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள்?. , 21 நாள் வீட்டிற்குள் இருந்தால் வைரஸ் செத்துடுமா?, இந்திய பொருளாதாரம் பெரும் அழிவை சந்திக்க போகிறது? என சகட்டு மேனிக்கு கலக குரல்கள் வெடித்தன. இருப்பினும் சமூக விலகலும், தனிமைப்படுத்தலுமே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நல்ல யோசனை என்பதால் மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை செயல்படுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: ச்சீ...இன்னம் என்ன கன்றாவி எல்லாம் பார்க்க வேண்டி வருமோ...ஊரடங்கில் இவங்க பண்ற அட்டகாசத்தை நீங்களே பாருங்க...!
இப்படி பிரதமர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் தடை உத்தரவு தான் சிறப்பான முடிவு என்று கொரோனா வைரஸ் பிரச்சனைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். ஊரடங்கு பிறப்பிப்பது சமூக விலகலை தடுக்க உதவும், இந்தியாவில் அது முன்கூட்டியே செயல்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சரிந்தது “பாகுபலி”யின் பிரம்மாண்ட சாம்ராஜ்யம்... காத்திருந்து வச்சி செஞ்ச தெலுங்கு சூப்பர் ஸ்டார்...!
மேலும் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி, அதை கட்டுப்படுத்துவதை மிகவும் சிரமமானதாக மாற்றியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்தியாவில் மிகக்குறைந்த அளவில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டவுடனேயே ஊடரங்கை பிறப்பித்துவிட்டார்கள். இது நிஜமாகவே தொலைநோக்கு பார்வை கொண்ட சிறப்பான முடிவு என்று பாராட்டியுள்ளார்.