Asianet News TamilAsianet News Tamil

Microsoft Outage | மைக்கரோசாப்ட் செயலிழப்பின் பின்னணி என்ன? வெளியிட்டது CrowdStrike!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் செயலிழப்பால் நேற்று விமானநிலையங்கள், பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவங்கள் பாதிக்கப்பட்டன.
 

Whats behind Microsoft Windows Outage? CrowdStrike released the details dee
Author
First Published Jul 20, 2024, 3:49 PM IST | Last Updated Jul 20, 2024, 3:49 PM IST

CrowdStrike பாதிப்பால், விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்யமுடியாமல் போனது. மேலும், போர்டிங் பாஸ் சேவைகளும் முடயங்கியதால், அவை கையால் எழுதித்தரப்பட்டன. இருப்பினும் ஏராளமான விமானங்கள் நாடு தழுவிய அளவில் ரத்து செய்யப்பட்டன. பங்கு சந்தையும் முடங்கியது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் கணினிகளின் சென்சார் கட்டமைப்பில் புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் தவறே இதற்கு காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. CrowdStrike சாப்ட்வேர் புதிய பதிப்பு தரவிறக்கத்தின்போது ஜூலை 19 அன்று இந்த IT செயலிழப்பு தொடங்கியது. இது பின்னர், முழு கணினி செயலிழப்பிற்கும் வழிவகுத்தது. இதனால், நாடு தழுவிய அளவில் விண்டோஸ் பயனாள்கள் "The Blue Scree of Death"-ஐ கண்டனர்.

தற்போது, அந்த பிழை சரிசெய்யப்பட்டு உலகம் முழுவதும் கணினி சர்வர் அமைப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன என்றும், அதன் தொழில்நுட்ப விவரங்களை CrowdStrike தெரிவித்துள்ளது.

Microsoft : முடங்கிய சேவை.. பெரும் சரிவில் Microsoft - சில மணி நேரங்களில் ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

Windows Down

Microsoft Outage-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் விண்டோஸ் பதிப்பு 7.11 மற்றும் அதற்கு மேல் கொண்ட இயங்குதளத்தில் பணியாற்றிவர்கள் தான். மேலும், பொதுவாக Falcon Sensor ஃபால்கன் சென்சார் இயங்கும் வாடிக்கையாளர்களே இதன் மூலம் அதிகம் பாதக்கப்பட்டனர்.
ஜூலை 19 அன்று குறிப்பிட்ட நேரத்தில் ஆன்லைனில் இருந்தவர்கள் இதனால் பாதிக்கப்பட்டன.

இந்த சம்பவத்திற்கான காரணம் சைபர் தாக்குதல் அல்ல என்று தெரிவித்துள்ள Crowdstrike, 04:09 UTC இல் ஏற்பட்ட புதுப்பிப்பு மட்டுமே என தெரிவித்துள்ளது. சாப்ட்வேட் கட்டமைப்பின் புதுப்பிப்பு ஒரு தர்க்கப் பிழையைத் தூண்டியது, இதன் விளைவாக விண்டோஸ் செயலிழந்தது, என CrowdStrike குறிப்பிட்டுள்ளது.

முடங்கிய மைக்ரோசாப்ட்; திண்டாடும் விமான நிறுவனங்கள் - மதுரை, திருச்சியில் விமானங்கள் ரத்து

CrowdStrike பிழையைச் சரிசெய்தல் மற்றும் ஆன்லைனில் மீண்டும் பணியை தொடங்க சமீபத்திய தகவலைப் பெற, பயனர்கள் CrowdStrike இணையதளத்தின் வலைப்பதிவு அல்லது ஆதரவு போர்ட்டலைப் பார்வையிடலாம் என்றும், மேலும் தகவல்கள் தேவைப்படின் அவர்கள் நேரடியாக நிறுவனத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்; உலகம் முழுவதும் பாதிப்பு சரி செய்வது எப்படி? Microsoft விளக்கம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios