Microsoft : முடங்கிய சேவை.. பெரும் சரிவில் Microsoft - சில மணி நேரங்களில் ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?
Microsoft Hit With Big Loss : ஒரு மென்பொருள் நிறுவனத்தில் கோளாறு ஏற்பட்டால் என்னவாகும் என்பதை நிரூபித்துள்ளது Microsoft நிறுவனத்தின் முடக்கம்.
உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களை முடக்கிய Microsoft நிறுவனத்தின் IT சம்மந்தமான பிரச்சனை, அது நடந்த வெகு சில மணிநேரங்களில் அந்நிறுவனத்தின் மதிப்பை சுமார் 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அழித்துள்ளது என்றே கூறலாம். தொழில்நுட்ப நிறுவனமான Microsoftன் பங்கு விலை சுமார் 0.71% குறைந்துள்ளது.
அதன் விளைவாக அந்நிறுவனத்தின் மதிப்பு நேற்றைய சந்தை முடிவில் இருந்து, சுமார் 23 பில்லியன் டாலர்கள் சரிந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முன், Microsoft நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 3.27 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.
முடங்கிய மைக்ரோசாப்ட்; திண்டாடும் விமான நிறுவனங்கள் - மதுரை, திருச்சியில் விமானங்கள் ரத்து
ஆனால் இந்த பூதாகார பிரச்சனைக்கு பின் ஒவ்வொரு 0.1% வீழ்ச்சிக்கும், அதன் பங்கு விலை தோராயமாக $3.33 பில்லியன் டாலர்கள், அதன் நிறுவன மதிப்பில் இருந்து அழிக்கப்படுகிறது என்று கணக்கிட்டுள்ளது பிரபல நிறுவனம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடக்கம், உலகளவில் உள்ள நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் தொழில்நுட்ப அமைப்புகள் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்து இருப்பதால், அந்நிறுவனம் இழந்த தனது மதிப்பை, குறைந்த நேரத்தில் திரும்பப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும்போது, அதன் முதலீட்டாளர்கள் மீதான தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதை இது நினைவூட்டுகிறது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்..