அமெரிக்காவை மிரட்டிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ஆட்டம் கண்ட சுதந்திர தேவி சிலை!

புதன்கிழமை பெய்த மழையின்போது சுதந்திர தேவி சிலையை ஒரு பெரிய மின்னல் தாக்கியது. சுதந்திர தேவி சிலையின் கையில் உள்ள தீபத்தில் மின்னல் படுகிற தருணத்தை புகைப்படக் கலைஞர் டான் மார்ட்லேண்ட் படம் பிடித்து அசத்தினார்.

Watch Statue Of Liberty Trembles As Strong Earthquake Hits New York sgb

நியூயார்க் நகரின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை பூகம்பத்தால் தாக்கப்பட்ட தருணத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

நியூஜெர்சியில் பதிவான 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், நியூயார்க் நகரம் உட்பட அண்டை மாநிலங்களை உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தின்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவை எர்த் கேம் நிறுவனம், ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

"காலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், லிபர்ட்டி சிலை நடுங்குவதைப் பார்க்கிறோம்" என அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நியூ ஜெர்சியில் 1884 இல் ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, நிகழ்ந்துள்ள பெரிய நிலநடுக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.

நூறு வயதுக்கு மேல் வாழ்வது எப்படி? உலகின் வயதான மனிதர் கூறும் நீண்ட ஆயுள் ரகசியம்!

அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. ஆனால், இந்த நிலநடுக்கத்தின்போது லிபர்ட்டி சிலை ஆடிய வீடியோ வைரலாகி இருக்கிறது. பலரும் வீடியோவைப் பகிர்ந்து தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை பெய்த மழையின்போது சுதந்திர தேவி சிலையை ஒரு பெரிய மின்னல் தாக்கியது. சுதந்திர தேவி சிலையின் கையில் உள்ள தீபத்தில் மின்னல் படுகிற தருணத்தை புகைப்படக் கலைஞர் டான் மார்ட்லேண்ட் படம் பிடித்து அசத்தினார். அந்தப் படமும் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நியூ ஜெர்சியில் வெள்ளிக்கிழமை 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கவர்னர் பில் மர்பி, உடனடியாக அவசரகால நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த அதிர்வின் மையம் பிரிட்ஜ்வாட்டருக்கு வடமேற்கே 7.4 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது சோமர்செட் கவுண்டிக்கு அருகே உள்ளது.

ராவணனுக்கு மாட்டிறைச்சி கொடுத்த சீதை! ஐஐடி மாணவர்கள் நடத்திய நாடகத்தால் புதிய சர்ச்சை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios