நூறு வயதுக்கு மேல் வாழ்வது எப்படி? உலகின் வயதான மனிதர் கூறும் நீண்ட ஆயுள் ரகசியம்!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவருக்கு பிடித்த உணவான மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிட்டு வருவதாகவும் ஜான் டின்னிஸ்வுட் தெரிவித்துள்ளார்.

John Tinniswood: 111-Year-Old Briton, World's New Oldest Man, Reveals Secret To His Longevity sgb

உலகின் மிக வயதான ஆணாகக் கருதப்படும் 111 வயதான பிரிட்டனைச் சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட், தனது நீண்ட ஆயுட்காலம் "வெறும் அதிர்ஷ்டம்" என்றும் அவரது உணவில் சிறப்பு ரகசியம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவருக்கு பிடித்த உணவான மீன் மற்றும் சிப்ஸ் சாப்பிட்டு வருவதாகவும் ஜான் டின்னிஸ்வுட் தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுக்கு முன்பே பணி ஓய்வு பெற்ற டின்னிஸ்வுட், உலகின் மிகவும் வயதான ஆண் என்ற கின்னஸ் உலக சாதனையை வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (114) என்பவரிடமிருந்து பெற்றுள்ளார். பெரெஸ் மோரா இந்த வார தொடக்கத்தில் மரணம் அடைந்ததை அடுத்து டின்னிஸ்வுட் உலகின் வயதான ஆணாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜான் டினிஸ்வுட் உலகிலேயே மிகவும் வயதான ஆண் என்ற அறிவிப்புக்கான கின்னஸ் அமைப்பு அதற்கான சான்றிதழையும் அவரிடம் ஒப்படைத்துள்ளது.

டின்னிஸ்வுட் 1912 இல் வடக்கு இங்கிலாந்தின் மெர்சிசைடில் பிறந்தார். ஓய்வுபெற்ற கணக்காளரும் முன்னாள் தபால் சேவை ஊழியருமான டினிஸ்வுட்டின் வயது 111 ஆண்டுகள் மற்றும் 222 நாட்கள்.

அவரிடம் அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தைக் கேட்டபோது, அவர் ஒரு வேடிக்கையான பதிலைக் கூறினார். "நீங்கள் நீண்ட காலம் வாழ்கிறீர்களா அல்லது குறைந்த காலம் வாழ்கிறீர்ககளா என்பதை நீங்கள் தீர்மானிக்கும் வாய்ப்பு அதிகம் இல்லை"  என்று அவர் தெரிவித்துள்ளார்.

"உலகம், அதன் வழியில், எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இது ஒரு வகையான தொடர்ச்சியான அனுபவம்... இது கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருகிறது, ஆனால் இன்னும் அதிகமாக மாறிவிடவில்லை. சரியான வழியில்தான் செல்கிறது என நினைக்கிறேன்" எனவும் அவர் கூறுகிறார்.

உலகில் நூறு வயதைக் கடந்தவர்களைப் பதிவுசெய்துவரும் ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழு கின்னஸ் அமைப்பின் சார்பாக டின்னிஸ்வுட்டின் வயதை மதிப்பிட்டு அவரது கின்னஸ் உலக சாதனையை உறுதி செய்தது.

116 ஆண்டுகள் மற்றும் 54 நாட்கள் வாழ்ந்த ஜப்பானின் ஜிரோமோன் கிமுராதான் இதுவரை உலகின் மிகவும் வயதான மனிதர். 117 வயதான ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மோரேரா என்பவர்தான் தற்போது வாழும் மிகவும் வயதான பெண் மற்றும் வயதான மனிதர் ஆவார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios