புதுச்சேரி பல்கலைக்கழகம் மார்ச் 29 அன்று நடைபெற்ற வருடாந்திர கலாச்சார விழாவின்போது சர்ச்சைக்குரிய நடகத்தை அரங்கேற்றியது. அடுத்த சில நாட்களில் ஐஐடி பாம்பேயின் 'ராவோஹன்' நாடகம் மீதான எதிர்ப்பு வந்திருக்கிறது.

பல்கலைக்கழக கலாச்சார நிகழ்வுகளில் இந்து தெய்வங்கள் மற்றும் இதிகாசங்கள் சித்தரிக்கப்படுவது தொடர்பான சமீபத்திய சர்ச்சை இந்தியா முழுவதும் சீற்றத்தையும் விவாதத்தையும் தூண்டியுள்ளது. அண்மையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் ராமாயணக் கதாபாத்திரங்கள் மனதை புண்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது மீண்டும் ஐஐடி பம்பாயில் அதேபோன்ற சர்ச்சை வெடித்துள்ளது.

ஐஐடி பம்பாய் கலாச்சார விழாவில், மார்ச் 31 அன்று நடந்த கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "ராஹோவன்" என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம் ராமரைச் சித்தரித்த விதம் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த நிகழ்வின் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளன. இந்த விவகாரம் கலை சுதந்திரம் மற்றும் மத உணர்வுகள் பற்றிய விவாதத்தையும் உருவாக்க இருக்கிறது.

இளைஞரைக் கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்; உ.பி.யில் அட்டூழியம்!

Scroll to load tweet…

இந்து கடவுள்கள் குறிப்பாக ராமர், சீதா தேவி மற்றும் ராமாயணத்தின் பிற கதாபாத்திரங்கள் கேலி செய்யப்பட்டு மற்றும் அவமரியாதையாக நடத்தப்பட்டதன் காரணமாக இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. நாடகத்தில், கதாபாத்திரங்களின் பெயர்கள் சிறிது மாற்றப்பட்டுள்ளன. ராமாயண காவியத்தின் மீது பெண்ணிய விமர்சனத்தை முன்வைக்கிறது.

இருப்பினும், ஒரு தரப்பு பார்வையாளர்கள் நாடகத்தின் சித்தரிப்பு ஆட்சேபனைக்குரியது என்று சொல்கின்றனர். இந்துத்துவ அமைப்புகள் இந்த நாடகத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அமைப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

புதுச்சேரி பல்கலைக்கழகம் மார்ச் 29 அன்று நடைபெற்ற வருடாந்திர கலாச்சார விழாவின்போது சர்ச்சைக்குரிய நடகத்தை அரங்கேற்றியது. அடுத்த சில நாட்களில் ஐஐடி பாம்பேயின் 'ராவோஹன்' நாடகம் மீதான எதிர்ப்பு வந்திருக்கிறது.

லோன் எடுத்து கார் வாங்கப் போறீங்களா? என்னென்ன செலவு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு முடிவு பண்ணுங்க!

Scroll to load tweet…

'சோமயானம்' என்ற தலைப்பிலான நாடகம், இந்து இதிகாசமான ராமாயணத்தின் கதாபாத்திரங்களை அவமரியாதையான வகையில் காட்சிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. நாடகத்தில் சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சியை வழங்குவது, திருமணத்தைப் பற்றிய கருத்துகள், ஹனுமானின் வாலை ஆண்டெனாவாகக் கேலி செய்வது போன்ற காட்சிகள் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் எதிர்ப்பைப் பெற்றது.

ஏபிவிபி அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட துறைத் தலைவரை தற்காலிகமாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு விசாரணைக்கு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூமிக்கு அடியில் 700 கி.மீ. ஆழத்தில் ஒரு ரகசியப் பெருங்கடல்! அதிசயிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!