குழந்தைகளை பராமரிக்க ரூ.85 லட்சம் சம்பளம்..! 1 வாரம் வேலை.. 1 வாரம் லீவு.. யாருடைய வீட்டில் தெரியுமா?

EstateJobs.com என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த வேலைக்கு, 26 வார வேலைக்கு $100,000 மிகப்பெரிய சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vivek ramasamy hire a nanny for 85 lakhs salary to takecare of his children Rya

இந்திய வம்சாவளி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான விவேக் ராமசாமி தனது இரண்டு குழந்தைளை பராமரிக்க ஒரு ஆயாவை தேடுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. EstateJobs.com என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த வேலைக்கு, 26 வார வேலைக்கு $100,000 மிகப்பெரிய சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சத்திற்கும் அதிகமாகும். தனியார் சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற வீட்டுப் பணியாளர்களைத் தேடுவதற்காக பணக்காரர்களால் பதிவிடப்பட்ட வேலைகளை EstateJobs இணையதளம் பட்டியலிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விளம்பர அறிவிப்பில் "ஆர்வம், சாகசம் மற்றும் நிலையான இயக்கம் ஆகியவை குடும்பத்தின் வாழ்க்கை முறையை வரையறுக்கின்றன. தனிப்பட்ட குடும்ப சாகசங்களில் பங்கேற்கும் போது, அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சி பங்களிக்கும், உயர்தர குடும்பத்தில் சேர இது ஒரு அரிய வாய்ப்பாகும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், வாரத்திற்கு 84-96 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் வேலை செய்தால், 7 நாட்கள் விடுமுறை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தங்கள் வீட்டுப் பணியாளர்கள் ஒரு சமையல்காரரை உள்ளடக்கியிருந்தாலும், இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர், உணவு தயாரித்தல் மற்றும் சத்தான சைவ விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வீட்டில் உள்ள மற்ற பணியாளர் குழுவுடன் அவர் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவு, குழந்தைகளுக்கான தினசரி வழக்கத்தை அமைக்க உதவ வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், இதுதொடர்பான பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி..

தங்கள் குடும்பம் ஒவ்வொரு வாரமும் பயணம் செய்வதாகவும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் "வாராந்திர குடும்பப் பயணங்கள், பெரும்பாலும் தனியார் விமானங்கள் மூலம் இருக்கும் ஒரு வழக்கமான நிகழ்வு ஆகும், இந்த பயணத்தின் போது ஆயா அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை அறிவிப்பை வெளியிட்ட வாடிக்கையாளரின் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், விவேக் ராமசாமியின் வீட்டில் இருந்த இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளதாக பல ஊடகங்களும் சுட்டிக்காட்டி உள்ளன.

யார் இந்த விவேக் ராமசாமி?

இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்த விவேக் ராமசாமி. அமெரிக்க பெரும் பணக்கார தொழிலதிபர் ஆவார். 2024-ல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறிங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். 1985-ம் ஆண்டு, ஓஹியோவின் சின்சினாட்டியில் பிறந்து வளர்ந்த விவேக் ராமசாமி, தனது இளங்கலைப் படிப்பிற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். அவர் ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி வெக்ஸ்னர் மருத்துவ மையத்தின் உதவி பேராசிரியர் அபூர்வா திவாரியை மணந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

"ஆண் ஆண்தான், பெண் பெண்தான்": மூன்றாவது பாலினம் குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சர்ச்சை பேச்சு

2014 இல் Roivant Sciences என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய விவேக் ராமசாமி அமெரிக்க மருந்து தயாரிப்பு துறையில் கொடி கட்டி பறந்தார். தற்போது அமெரிக்க மருத்துவத்துறையில் முன்னணி தொழிலதிபராக வலம் வரும் விவேக் ராமசாமி Woke, Inc: Inside Corporate America's Social Justice Scam" உள்ளிட்ட நூல்களை எழுதி உள்ளார். விவேக் ராமசாமியின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 4000 கோடி ரூபாய்க்கு மேல் என்று மதிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது., 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios