ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி..

ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6.6 magnitude Powerful earthquake hits Japan.. Tsunami warning issued Rya

ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானின் டோரிஷிமா தீவுக்கு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவிற்கு தெற்கே 550 கிமீ (340 மைல்) தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் அந்த தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பதால் உயிர்ச்சேதம் இருக்காது என்று நம்பப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலில் டோக்கியோவின் தெற்கே அமைந்துள்ள தொலைதூர சங்கிலி தீவுகளுக்கு 1 மீட்டர் வரை அலைகளை முன்னறிவித்தது. இசு தீவுகளில் குறைந்தபட்சம் 30 செ.மீ உயரம் கொண்ட சுனாமி அலைகள் காணப்பட்டன. மேலும் கரையோரப் பகுதிகள் மற்றும் ஆற்றின் முகத்துவாரங்களுக்கு அருகில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளுக்கு பின்வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எனினும் இதேபோன்ற அளவு நிலநடுக்கம் ஏற்பட 10% முதல் 20% வரை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு பசிபிக் பெருங்கடலின் அதே பகுதியில் கடந்த திங்கள்கிழமை முதல் இன்று வரை தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகி வந்தன. எனினும் இதுவரை, இந்த நிலநடுக்கத்தின் விளைவாக அசாதாரண எரிமலை செயல்பாடு எதுவும் இல்லை, கடந்த 2006 ஆம் ஆண்டு டோரிஷிமா தீவுக்கு அருகில் இதேபோன்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் 16 செ.மீ சுனாமி மியாகே-ஜிமாவை அடைந்தது. 2022 டோங்கா-ஹுங்கா ஹா'பாய் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமிக்குப் பிறகு இசு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தன்வினை தன்னைச் சுடும்ங்கிறது சீனாவுக்கே பொருந்தும்; சீன வீரர்கள் 55 பேர் கொலையா? என்ன நடந்தது?

பூமியில் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் ஜப்பான் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு வடக்கு ஜப்பானின் பெரும் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios