"ஆண் ஆண்தான், பெண் பெண்தான்": மூன்றாவது பாலினம் குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சர்ச்சை பேச்சு
மக்கள் தாங்கள் விரும்பும் எந்த பாலினத்திலும் இருக்கலாம் என்பதை நம்பமுடியவில்லை என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேசி இருக்கிறார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மூன்றாம் பாலினத்தவர் பற்றி பேசிய சமீபத்திய பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பேசிய ரிஷி சுனக், பாலின விவாதம் குறித்த தனது நிலைப்பாட்டைப் பகிர்ந்துகொண்டார்,
"மக்கள் தாங்கள் விரும்பும் எந்த பாலினத்திலும் இருக்கலாம் என்பதை நம்பமுடியவில்லை. ஆண் ஆண்தான், பெண் பெண்தான். அந்தப் புரிதல் சாதாரணமானது" என்று குறிப்பிட்டார். மேலும், "நாங்கள் இந்த நாட்டை மாற்றப் போகிறோம், அதாவது, வாழ்க்கையை. அது ஒரு சர்ச்சைக்குரிய நிலையில் இருக்கக்கூடாது. கடின உழைப்பாளிகளில் பெரும்பாலோர் அதை ஒப்புக்கொள்கிறார்கள்" என்றார்.
விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்! மனைவி ஆயிஷா செய்த கொடுமைகளுக்கு முடிவுகட்டிய டெல்லி நீதிமன்றம்
பெற்றோர் தங்கள் குழந்தைகள் உறவுகளைப் பற்றி பள்ளியில் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ரிஷி சுனக்கின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சிலர் அவரது கருத்தை ஆதரித்தாலும், பலரும் திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார் என கண்டனம் தெரிவிக்கின்றனர். அவருடைய கருத்து பொது அறிவில் இருந்து வெகு தொலைவில் பின்தங்கி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
''சிறுபான்மை சமூகத்தின் மீது மட்டுமல்ல, மிகவும் ஆபத்தில் இருக்கும் சமூகத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது மோசமானது. இது முற்றிலும் கேவலமானது" என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் கருத்துத் தெரிவிக்கையில், "கணிதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் சுனக்கின் உயிரியல் சார்ந்த அறிவு மிகவும் மோசமாக உள்ளது. பாலினம் என்பது மிகவும் சிக்கலான விஷயம். பொது அறிவு அல்ல. மாற்று பாலினம் குறித்த விவாதத்தைத் தொடங்குவதற்கு முன் இதை அறிந்திருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.உடல் மற்றும் பாலினத்துக்கு இடையிலான வேறுபாட்டை சுனக் புரிந்து கொள்ளவில்லை என இன்னொரு பயனர் கருதுகிறார்.
பிரிட்டன் மருத்துவமனைகளில் பெண்களுக்கான வார்டுகளில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதை தடை செய்யும் திட்டத்தை சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே முன்மொழிந்ததை அடுத்து பிரதமர் ரிஷி சுனக் பாலினம் குறித்த தன் கருத்தி வெளிப்படுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது.
ஹைட்ரஜனில் இயங்கும் சுசுகி பர்க்மேன்! ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகம்!