இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் இளைஞர் ஒருவர் முள்வேலியைத் தாண்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி, எல்லைப் பாதுகாப்பு குறித்து கடுமையான விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் ஒரு இளைஞர் சாதாரணமாக முள்வேலியைத் தாண்டிச் செல்வது போன்ற ஒரு சிறிய காணொளி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்தக் காணொளி கடுமையான எதிர்வினைகளையும், அரசியல் ரீதியான கருத்துகளையும் தூண்டியுள்ளது.
எக்ஸ், ரெடிட் போன்ற தளங்களில் பரவும் இந்தக் காணொளியில், ஒரு இளைஞர் முள்வேலியை மெதுவாகத் தாண்டி ஏறுவது காட்டப்படுகிறது.
அதே நேரத்தில், மற்றொரு நபர் இந்தக் காட்சியைப் பதிவு செய்கிறார். மூன்றாவது நபர் ஒருவரும் அருகில் இருப்பது தெரிகிறது.
“இந்தியா-பங்களாதேஷ் எல்லையை இளைஞர் சாதாரணமாகக் கடக்கிறார். இதற்கு யாரைக் குறை சொல்வது?" என்ற தலைப்புடன் இந்தக் காணொளி பகிரப்பட்டுள்ளது.
இந்த வைரல் வீடியோவில் எந்தவொரு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (BSF) காணப்படவில்லை. மேலும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் அல்லது தேதி குறித்தும் எந்தத் தெளிவான தகவலும் இல்லை.
சமூக ஊடகங்களில் எதிர்வினைகள்
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் சமூக ஊடகங்களில் வலுவான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்ழ
"எல்லாப் பாதுகாப்புப் படை என்ன செய்கிறது?" என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். பலர் அரசியல் ரீதியான கருத்துக்களையும் கிண்டலையும் பதிவிடுகின்றனர்.
ஒரு பயனர் மத்திய அரசைக் குறை கூறினார். எல்லாவற்றையும் பாஜக கட்டுப்படுத்துகிறது, ஆனால் எல்லைகள் பாதுகாக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த மற்றொருவர், இந்தக் குறைக்கு 'நேருதான்' காரணம் என்று கேலியாகக் கூறியிருக்கிறார்.
மற்றொருவர், திப்பு சுல்தான், அக்பர், நேரு மற்றும் மகாத்மா காந்தி போன்ற வரலாற்றுத் தலைவர்களைக் குற்றம் சாட்டியதுடன், சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு எக்ஸ் பயனர், அந்த இளைஞர் எந்தப் பைகளையும் எடுத்துச் செல்லவில்லை என்றும், அவர் நிரந்தரமாக நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் 'ரீல்ஸ்' உருவாக்கி, கவனத்தை ஈர்க்க பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் இதைச் செய்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
எல்லையின் எந்தப் பகுதியும் ஆளில்லாமல் இல்லை என்று கூறி, சிலர் இந்தக் வீடியோ தவறான தகவலைப் பரப்புவதாக வாதிடுகிறார். முள்வேலியில் மின்சாரம் பாய்ச்சுவது உட்பட, எல்லைப் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்று சில பயனர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
வீடியோ குறித்து சந்தேகம்
இதுவரை இந்த வீடியோ குறித்து அதிகாரிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது அல்லது அது உண்மையிலேயே இந்தியா-பங்களாதேஷ் எல்லையைக் காட்டுகிறதா என்பது குறித்து எந்த உத்தரவாதமும் இல்லை.


