சமாதி நிலைக்குப்போன நித்யானந்தா... கைலாசாவில் நடந்த அதிர வைக்கும் வீடியோ..!
கைலாசாவில் பக்தர்களுக்கு நித்யானந்தா அதிசயத்தை நிகழ்த்தியதாக சமூகவலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
நித்யானந்தா பற்றி பல்வேறு தகவல்கள் தந்தியடிக்கின்றன. அவர் போலிச்சாமியார் என்கிறார்கள். அவரிடம் உள்ள ஒரு சக்தி வாய்ந்த கல்லைக் கொண்டு பிறரை வசியம் செய்வதாகவும் சொல்கிறார்கள். இப்படி இருக்கையில் அவர் கைலாசா தீவை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை எனவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் நித்யானந்தா தனது சீடர்களுடன் கடற்கரையில் இருந்து வானத்தில் அற்புதத்தை நிகழ்த்தியதாக ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் உலா வருகிறது.
அந்த வீடியோ இதோ...
அடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடியுரிமை பறிக்கப்பட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன் என்று கிண்டலடித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள கைலாசா பிரதமர் அலுவலகம், ‘’ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்’’என தெரிவித்துள்ளது.
இப்படியொரு கூத்துக்கள் நடந்துவர, கைலாசா பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், ‘’நாலு பேரு நாலு விதமா பேசுனா அது நாடு. அதுவே நாலு பேரு நாலு விதமா நித்யானந்தாவை பற்றி பேசினால் அது தமிழ்நாடு என்றும், ’’இரண்டு நாள் சமாதி நிலையில் இருந்ததால் கைலாச நாட்டு மக்களை காண இயலவில்லை. தாய் மீனாட்சியின் அருள் அதிகமாக என் நாட்டு மக்கள் மீது இருப்பதை கண்டேன்’’எனவும் தெரிவித்துள்ளது.