குஜராத் மோர்பி பாலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

குஜராத் மோர்பி பாலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகரில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்ட மிக பழமையான பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக இந்த பாலத்தில் புதுப்பித்தல் பணி நடைபெற்று வந்தது. பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு மீண்டும் இந்த பாலம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் பாலத்தில் மக்கள் கயிறு கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்கும் வேளையில், திடீரென்று கயிறுகள் அறுந்து பாலம் கவிழந்தது.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!

இந்த பயங்கர விபத்தில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று குஜராத் சென்ற பிரதமர் மோடி விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு வெடிப்பு - 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Scroll to load tweet…

இதுக்குறித்த ஜோ பைடனின் டிவிட்டர் பதிவில், எங்களுடைய இதயங்கள் இன்று இந்தியாவுடன் உள்ளன. பாலம் இடிந்து விழுந்த விபத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அமெரிக்காவும் இந்தியாவும் தவிர்க்க முடியாத நண்பர்கள் ஆவர். இருநாட்டின் மக்களுக்கு இடையே ஆழமான உறவுகள் உள்ளன. இந்த கடினமான நேரத்தில், தொடர்ந்து இந்திய மக்களுடன் உறுதியாக நிற்போம் மற்றும் ஆதரவளிப்போம் என்று குறிப்பிட்டிருந்தார். இதேபோல் கமலா ஹாரிஸும் குஜராத் சம்பவத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…