பிரதமர் மோடி வருகையால் விசாவை விதிகளைத் தளர்த்துமா அமெரிக்கா? எதிர்பார்ப்புடன் இந்திய ஐடி ஊழியர்கள்
எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் வசிக்கும் கணிசமான இந்தியர்கள் எளிதாக விசாக்களை புதுப்பிக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் ஜோ பைடன் தலையிலான அரசு இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி, அமெரிக்காவில் இந்தியர்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்குமான நிபந்தனைகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. H-1B விசா வைத்துள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு ஊழியர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாமலே அமெரிக்காவில் விசாவைப் புதுப்பிப்பதற்கான அனுமதியை அமெரிக்க வெளியுறவுத்துறை வியாழக்கிழமை அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் வசிக்கும் கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு ஊழியர்கள் ஒரு குழுவினர் எளிதாக விசாக்களை புதுப்பிக்க முடியும் என்று வெளியுறவுத்துறை அறிவிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதிய சோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இந்த வாய்ப்பு அடுத்தடுத்த வருடங்களில் விரிவுபடுத்தப்படலாம் என்றும் தெரிகிறது.
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி! 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வரவேற்பு!
2022ஆம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 4,42,000 H-1B விசா பெற்ற ஊழியர்களில் 73% பேர் இந்தியர்கள் என்பதால் இந்த புதிய சோதனைத் திட்டம் அறிவிக்கப்பட்டால் இந்தியர்கள் அதன் மூலம் அதிக பயன் அடைவார்கள். திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தேடும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 65,000 H-1B விசாக்கள் அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. மேலும் மேம்பட்ட பட்டப்படிப்புகளைக் கொண்ட ஊழியர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்களும் வழங்கப்படுகின்றன.
மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் இந்த விசாக்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். அமெரிக்க அரசாங்கத் தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களும், அமெரிக்காவில் உள்ள அமேசான், கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் H-1B விசாவில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.
உலக அமைதிக்காக இணைந்து செயல்படுவோம்: வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு
தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களில் ஒரு குழுவினர் அமெரிக்காவில் தங்கள் விசாவைப் புதுப்பிக்க அனுமதிப்பதால், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் விசா நேர்காணலுக்கான நேரம் மிச்சப்படும் என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த சோதனை முறை திட்டத்தில் எல்-1 விசாக்கள் உள்ள சில பணியாளர்களும் அடங்குவர். இது அமெரிக்காவிற்குள் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் வேறொரு நிறுவனத்துக்கு மாறுவதற்கும் பயன்படும். அமெரிக்காவில் வசிக்க விசா பெறுவது தொடர்பான நெருக்கடிகளுக்குத் தீர்வு காண இந்திய நீண்ட காலமாகப் முயன்று வருகிறது. குறிப்பாக, தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் விசாவைப் புதுப்பிப்பதில் சிக்கல் நிலவுகிறது. இச்சூழலில், கடந்த ஏப்ரல் மாத இறுதியில், நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தொழிலாளர் துறை கூறியிருக்கிறது.
விண்வெளியில் மாஸ் காட்ட இஸ்ரோ - நாசா இடையே புதிய ஒப்பந்தம்!
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் சிலர், தொழில்நுட்பத் துறையில் பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்து இந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் 60 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தில் சேர்ந்தால் விசாவைப் புதுப்பிக்க முடியும் அல்லது தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். கோவிட் தொற்றுநோய் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகெங்கிலும் உள்ள அனைத்து விசா வழங்கல் செயல்பாடுகளையும் அமெரிக்கா நிறுத்தியது. அதனால் அமெரிக்க விசா சேவைகளில் ஏற்பட்ட பின்னடைவு இன்னும் சீரடையவில்லை.
இந்தியாவிலேயே ஜெட் எஞ்ஜின்களைத் தயாரிக்க அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து