வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி! 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வரவேற்பு!
வெள்ளை மாளிகைக்குச்ச சென்ற பிரதமர் மோடிக்கு 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று வெள்ளை மாளிகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
வெள்ளை மாளிகைக்குச்ச சென்ற பிரதமர் மோடிக்கு 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. பிரதமர் மோடியை வரவேற்றுப் பேசிய அதிபர் ஜோ பைடன், "நான் துணை ஜனாதிபதியாக இருந்ததில் இருந்து நாங்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவிட்டுள்ளோம்... உலக சூழ்நிலையில், இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படுவது அவசியம்" என்றார்.
“நான் பிரதமரான பிறகு பலமுறை வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளேன்.. ஆனால்..” பிரதமர் மோடி பேச்சு
"வறுமையை ஒழிப்பது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவது மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது... ஆகியவை அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் மட்டுமின்றி உலகிற்கே முக்கியமானவை... இன்று நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று ஜோ பைடன் கூறினார்.
பின்னர் அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டவை. இரு நாடுகளின் அரசியலமைப்புகளும் 'We the people' (மக்களாகிய நாம்) என்ற வார்த்தைகளுடன் தொடங்குகின்றன. இரு நாடுகளும் தம் பன்முகத்தன்மையில் பெருமிதம் கொள்கின்றன. கோவிட் சகாப்தத்திற்குப் பிறகு, உலகம் ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. உலகளாவிய நன்மை, உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, ஒன்றாகச் செயல்பட உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறினார்.
"Welcome Mr Prime Minister" இந்தியா - அமெரிக்கா உறவை புகழ்ந்து தள்ளிய அதிபர் ஜோ பைடன்!
"இன்று பிற்பகல், அமெரிக்க காங்கிரஸில் இரண்டாவது முறையாக உரையாற்றும் வாய்ப்பைப் பெறுகிறேன். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... இந்தியாவின் மூவர்ணக் கொடியும், அமெரிக்கக் கொடியின் நட்சத்திரமும், கோடுகளும் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். உலக அளவில் வெகு சில வெளிநாட்டுத் தலைவர்கள் மட்டுமே இதுப்னோற் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றியுள்ளனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த உரையைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அவருக்கு இரவு விருந்து நடைபெறும்.